PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில் காந்தத் துருவங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
காந்தங்களுக்கு துருவங்கள் இருக்கிறதா?
  
ஆம்
 
காந்தங்களுக்கு துருவங்கள் உண்டு.
 
அவற்றை எவ்வாறு கண்டறிவது ?
 
காந்தங்களின் துருவங்களை எவ்வாறு கண்டறிவது என்பதை ஒரு செயல்பாடுகளைக் கொண்டு அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
செயல்பாடு 1:
 
MjcyODE1Mgjpegjpeg.jpeg
காகிதம் மேல் காந்தகம் வைத்தல்
  • முதலில் இரும்புத் துகள்களை ஒரு காகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதை காந்தத்தின் மேல் வைத்து, சிலமுறை இரும்புத்துகள்களுக்குள் புரட்டி எடுக்க வேண்டும்.
  • இப்பொழுது காந்தத்தை எடுத்துப் பார்க்கும் போது, காந்தத்தின் முனைகளில் இரும்பு துகள்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும்.
  • காந்தத்தின் எப்பகுதியில் இரும்புத்துகள்கள் அதிக அளவில் ஒட்டி உள்ளனவோ அப்பகுதியையே  காந்தத்தின் துருவங்கள் என்கிறோம்.

காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கும், எனவே, இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம். 

செயல்பாடு 2:

  • காந்தம் கொண்டு செய்யும் பரிசோதனைக்கு நமக்கு அதிகபடியான இரும்புத் துகள்கள் தேவைப்படும். 
  • இரும்பு துகள்கள் சேகரிக்க காந்தத்தை மண்ணில் போட்டு புரட்டி எடுத்து கொள்ள வேண்டும். தற்போது இரும்புத் துண்டுகள் காந்தத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். 
  • மணல் இல்லை என்றால் களிமண் போன்றவற்றை பயன்படுத்தலாம் அல்லது இரும்பு துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து பரிசோதனை செய்யலாம். 
shutterstock107442095jpgjpg.jpg
இரண்டு துருவங்களில் இரும்பு துண்டு ஒட்டி இருக்கும் காட்சி
காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது, இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்.
நம்மிடம் லாட வடிவ காந்தமோ, அல்லது பிற வடிவிலான காந்தங்களோ இருப்பின் அவற்றின் துருவங்களையும் இந்த செயல்பாட்டின் மூலம் கண்டறிய முடியும்.