PDF chapter test TRY NOW
புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது. நீர் ஒரு இயற்கை வளம். இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இன்றியமையாதது. நமது பூமியில் அதிக அளவு நீர் உள்ளது. அதில் சிறிதளவே மனிதனின் தேவைக்கு ஏற்ப பயன்படுகிறது. புவியில் உள்ள நீர் வளத்தில் பெருமளவு 97% கடல் மற்றும் பெருங்கடலில் உள்ளது.
பூமி (அ) நீர் கோளம்
கடலில் கிடைக்கும் நீரினை நம்மால் குடிக்க இயலுமா?
நீரின் பெரும் பகுதி கடல் உவர்ப்பாக இருப்பதால் அவை குடிப்பதற்கு ஏற்றதல்ல. பெரும்பகுதி நன்னீர் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்து உள்ளதால் அது எளிதில் கிடைக்கக்கூடிய நீராக இருப்பதில்லை.
நன்னீர்
நாம் அன்றாட வாழ்வில் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீர் நன்னீர் என்று அழைக்கப்படும். நன்னீர் என்பது, உப்புக்கள் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீராகும்.
Example:
இது குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் வீடுகளில் காணப்படும் மற்றும் குழாய்களில் கிடைக்கும் நீர் பொதுவாக நன்னீராகும்.
புவியில் காணப்படும் நீரின் அளவு 100% ஆகும். இதனை உப்பு நீர் (கடல் நீர்) மற்றும் நன்னீர் என்று பிரிக்கலாம்.
- உப்பு நீர் - 97%
- நன்னீர் - 3%
பூமியில் கிடைக்கும் 3% நன்னீரில் நான்கில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாகவே துருவப்பகுதிகளில் உள்ளன.
மீதமுள்ள மொத்தம் 3% நன்னீரானது பின்வருமாறு பரவியுள்ளது.
- துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் - 68.7%
- நிலத்தடி நீர் - 30.1%
- மற்ற நீர் ஆதாரங்கள் - 0.9%
- மேற்பரப்பு நீர் - 0.3%
மொத்த மேற்பரப்பு நீரான 0.3% பின்வருமாறு பரவியுள்ளது.
- ஏரிகள் - 87%
- ஆறுகள் - 2%
- சதுப்பு நில நீர் - 11%
மேலே கொடுக்கப்பட்டுள்ள வட்ட விளக்க வரைபடத்திலிருந்து புவியில் நமது பயன்பாட்டிற்கென மிக்க குறைந்த அளவிலான நீரே கிடைக்கின்றது என்பதனையும், அதனை பாதுகப்பதன் அவசியத்தினையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
Important!
குறிப்பு: கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
மழை பொழியும் பொழுது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மழைநீரில் கரைந்து மழைநீரை சற்று அமிலமாக மாற்றுகிறது. அப்படி அமிலமாக மாறிய மழை பொழியும் பொழுது அது பாறைகளை அரிக்கிறது, பொதுவாகவே பாறைகளில் சோடியம் அதிகமாக காணப்படும் இப்படி அரிக்கபட்ட துகள்கள் கனிம உப்புகளை வெளியிடுகிறது. இந்த அயனிகள் ஆறுகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு இறுதியாக கடலை அடைகிறது. இப்படி கடலை அடைந்த சோடியம் நிறைந்து காணப்படும் நீர் .
கடல் நீர்
சூரியனின் வெப்பத்தால் ஆவியாக்கபடுகிறது இதன் காரணமாக நீரனாது ஆவியாகி மேலே சென்றுவிடும் ஆனால் உப்பானது கடலிலேயே தங்கிவிடும் இதன்காரணமாக கூடுதல் உப்பு கடலில் சேர்கிறது அதாவது உப்புநீர் ஆவியாகி நீர் மேலே சென்றுவடும் மீதமுள்ள உப்பு கடலிலேயே தங்கிவிடும் இவ்வாறு பல கோடி வருடங்கள் இந்த செயல் திரும்ப திரும்ப நடந்ததன் காரணமாக தற்போது கடல் அதிக உப்புதன்மை கொண்டதாக காணப்படுகிறது.
அதிக அளவு கரைபொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய நீரினை நாம் உப்பு நீர் என அழைக்கிறோம்.