PDF chapter test TRY NOW

"நீரின்றி அமையாது உலகு". இதன் பொருள் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். 
 
நீர் என்பது, இப்புவியில் உயிரினங்கள்  உயிர் வாழ்வதற்கு மூலதாரம் ஆகும். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழமுடியும். ஆனால், நீரின்றி ஒரு நாள் கூட வாழமுடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல புவியில் வாழும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து வகையான உயிரினங்களுக்கும் நீரானது மிகவும் அவசியமென்பது அறிந்த ஓன்று.
 
பூமியில் உள்ள நீரின் காரணமாகவே, பூமி உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது. நீரானது மேலும், புவியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உயிரினங்களின் உடல் வெப்பநிலையினைச் சமமாகப் பேணுவதிலும் நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
நீர்
  
drink -water.jpg
நீர்
நீர் என்பது சுவையற்ற, மணமற்ற, கண்ணாடி போன்ற மற்றும் கிட்டத்தட்ட நிறமற்ற ஒரு வேதிப் பொருளாகும். இது இரு ஹைட்ரஜன் மற்றும் ஒரு  ஆக்ஸிஜன் (2:1) அணுவுடன்  இணைந்து காணப்படுகிறது. எனவே, நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு \( H_2O\) ஆகும்.
நீர் மூலங்கள் (அல்லது) ஆதாரங்கள்
 
நாம் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், சமைப்பதற்கும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும் நீர் பயன்படுகிறது. மேலும்,  நீரானது விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 
கிராமங்களிலும்  நகரங்களிலும் வாழும் மக்களுக்கு  தேவையான நீரை பல்வேறு இயற்கை ஆதாரங்களான நீருற்றுகள், குளங்கள், ஆறுகள், கிணறுகள், ஏரிகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகிய மூலங்களில் இருந்து நீரினைப் பெறுகிறோம்.
 
YCIND250520223808WaterTM22.png
நீரின் பல்வேறு மூலங்கள்
 
புவிப்பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.
 
நீரின் இயற்பியல் நிலைகள்
  • திண்மம்
  • நீர்மம்
  • வாயு