PDF chapter test TRY NOW

நீர் பற்றாக்குறை
புவியில் காணப்படும் நீரின் அளவு மாறாமல் எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது . ஆனால் அந்நீரினை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதானல் பயன்படுத்தும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே உள்ளது .ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீரின் தேவையானது, அவ்விடத்தில் இருக்கும் நீரின் அளவினைவிட அதிகரிக்கும்போது நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .
நீர்ப் பற்றாக்குறைக்கான முதன்மையான காரணங்கள்
  
i. மக்கள் தொகைப் பெருக்கம்
 
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தின் காரணமாக மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரானது அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
 
ii. நீரினை கவனக்குறைவாக கையாளுதல்
 
வேளாண்மைக்கு அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மோசமான பாசனமுறைகள் மற்றும் பாசன நீர் கசிவு ஆகியவற்றால் வீணாகிறது.
 
iii. சீரான மழை பொழிவின்மை
 
சுற்றுச்சூழல் மாசுபாடு, புவிவெப்பமடைதல் உள்ளிட்ட பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சீரான மழை பொழிவின்மை.
 
vi. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
 
தொழிற்சாலைகள் மற்றும் பொறுப்பற்ற மக்களின் செயல்பாடுகள் அதிக நீர் பயன்பாட்டினை உருவாக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.
 
v. நீர் மாசுபடுதல்
 
வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் நீர்நிலைகளில் கலந்து, பயன்படுத்த முடியாமல் நீரினை மாசுபடுத்தி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன. 
 
மழைப்பொழிவு அதிகமாகும்போது வெள்ளம் ஏற்பட்டு நீர்நிலைகள் உடைப்பு நிகழ்கிறது. மேலும் வெள்ளத்தின்போது மாசடைந்த நீரினால் நன்நீர் தட்டுப்பாடு உண்டாகிறது.
 
நீர்ப் பாதுகாப்பு
நீர்ப் பற்றாக்குறையிலிருந்து நம்மைப் காத்துக் கொள்ள சில கவனமான வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் இப்புவியில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் ஏற்படக்கூடும். நீரினைக் கவனமாகவும், சிக்கனமாகப் பயன்படுத்தி அதனை அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாத்தலையே நீர்ப் பாதுகாப்பு எனப்படும்.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:
  • நீர் மேலாண்மை
  • மழைநீர் சேகரிப்பு
i. நீர் மேலாண்மை
 
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் நீர் மேலாண்மை மிகவும் அவசியமான ஒன்றாகும். தண்ணீர் குடிநீருக்கும், வீட்டு தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழில் சாலைகளின் பயன்பாடுகளுக்கும் அதிகம் தேவை உள்ளது. ஆனால் இன்றைய காலங்களில் நிலவும் வறட்சியினால் மாபெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  
நீர் மேலாண்மையின் காரணிகள்
  • நீர் நிலைகளின் கழிவுகளை கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தல் வேண்டும்.
  • நீரினைத் தூய்மைப்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் வேண்டும்.
  • விவசாயத்தில் அதிகப்படியான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினைக் குறைப்பதன் மூலம் நிலத்தடி நீரின் மாசுபாட்டினைக் குறைக்க முடியும்.
  • காடுகளைப் பாதுகாத்தல் வேண்டும்.
  • நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்றவைகளை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் பாசனத்திற்கு நீரினை  குறைக்க முடியும்.
ii. மழைநீர் சேகரிப்பு
மழை பொழியும்  போது கிடைக்கூடிய மழை நீரினை நேரடியாகச் சேகரித்து  பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
நீர்ப் பற்றாக்குறையை சரிசெய்ய மழைநீர் சேகரிப்பதே நிரந்தரத் தீர்வு ஆகும். விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப் படவேண்டும். இதனால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்.
 
மழைநீர் சேமிப்பு முறைகள்
 
i. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்
Example:
வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மேல்தளத்திலிருந்து  கிடைக்ககூடிய மழை நீரினை சேகரித்தல்.
ii. ஓடும் மழைநீரினை சேகரித்தல்
Example:
மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் அணைகள் அல்லது நீர்த்தேக்கங்களை உருவாக்கி மழை நீரினை சேகரித்தல்.
நீர்வாழ் விலங்குகள் பனிக்காலங்களில் , குளிர்ந்த நாடுகளில் ஏரிகள் மற்றும் குளங்கள் குளிர்ச்சியடைந்து நீரின் மேற்பரப்பில் திண்மநிலை பனிப்படலங்கள் உருவாகின்றன. இருந்தபோதிலும் பனிப்படலத்திற்கு கீழ் வசிக்கும் நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை. ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. எனவே நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சியடைந்து பனியாக மாறுகின்றது. இக்காரணங்கள் நீர்வாழ் விலங்குகளுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றன.
 
Important!
குறிப்பு:
 
கூவம் ஒரு முகத்துவாரம்!
 
முகத்துவாரம் என்பது நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலமாகும். இது நிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். சில தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு வாழ்விடமாக முகத்துவாரம் அமைகிறது.