PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மூலமாகவும், நிலத்தடி நீர் மூலமாகவும் பெறப்பட்ட நீரானது, சுத்திகரிப்பு செய்யப்பட்டு வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிக்கும் அமைப்பின் மாதிரி படம்
தண்ணீர் வீணாவதைத் தவிர்ப்போம்!
உங்கள் வீட்டில் அல்லது பள்ளியில் ஒழுகும் தண்ணீர்க் குழாய் இருந்தால், அதன் அடியில் ஒரு காலியான வாளியை வைத்து நீரைச் சேகரித்து கொள்ளவும். பின் ஒரு வாளி நீர் நிரம்பும் காலத்தினைக் கணக்கிட்டு வைத்து கொள்ள வேண்டும், அதன் பின் நீரின் அளவையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாளி ஒழுகும் நீர் நிரம்பும் நேரத்தையும் கணக்கிட்டபின், ஒரு நாளில் வீணாகும் நீரை நம்மால் கணக்கிட முடியும். உலகம் முழுவதும் உள்ள ஒழுகும் குழாய்களில் வீணாகும் நீரை இக்கணக்கீட்டின் மூலம் நம்மால் கணக்கிட முடியும்.