PDF chapter test TRY NOW
ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் நடைமுறை உணவுச்சங்கிலியாகும். காடுகளில் வாழும் மான்கள் புற்களை உணவாக சாப்பிடுகிறது. அந்த மான்களை அங்கு வாழும் புலிகள் வேட்டையாடி உண்ணுகின்றன என்பது நமக்குத் தெரியும். எனவே, எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில், வாழும் உயிரினங்களிடையே உணவு ஒரு சங்கிலித் தொடர் போல இந்த உறவு நீடிக்கிறது.
ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கு இடையே உண்ணுதல் மற்றும் உண்ணப்படுதலுக்கான சரியான வரிசை முறையைத் நாம் உணவுச்சங்கிலி என்கிறோம்.
ஓர் உயிரினம் உணவைப் பெற பிற உயிரினங்களை உண்பதன் மூலம் ஆற்றலை பெறுகிறது இதுவே உணவுச்சங்கிலி விளக்குகிறது.
உற்பத்தியாளர்கள் (எ.கா – புற்கள்), நுகர்வோர்கள் (எ.கா – மான், ஆடு, மாடு மற்றும் புலி) மற்றும் சிதைப்பவைகள் (எ.கா – பாக்டீரியாக்கள், பூஞ்சைகள்). இந்த மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பினை பற்றி உணவுச்சங்கிலி விளக்குகிறது.
i. நிலவாழ் சூழ்நிலைமண்டலத்தில் (புல்வெளி) உணவு சங்கிலி
எ.கா:
ii. நீர்வாழ் சூழ்நிலைமண்டலத்தில் (கடல்) உணவுச் சங்கிலி
எ.கா:
ஆற்றல் ஓட்டம்
உணவுச்சங்கிலியின் ஆற்றல் எவ்வாறு ஆரம்பிக்கிறது. முதலில் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஒளி ஆற்றலிருந்து தொடங்குகிறது. பின் சூரியஒளியின் மூலம் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது. இதனால் சூரிய ஒளியில் கிடைக்கும் ஆற்றலைத் தாவர பகுதிகளில் சேர்த்து வைத்துக் கொள்கிறது.
ஆற்றல் ஓட்டம்
வெட்டுக்கிளி உணவாக புற்களை உண்ணும் போது, புற்களில் உள்ள ஆற்றல் வெட்டுக்கிளிக்கு செல்கிறது. தவளை உணவாக இந்த வெட்டுக்கிளியை உண்ணும் போது அதனிடம் உள்ள ஆற்றலை தவளை பெறுகிறது. இந்த ஆற்றலானது ஒரு பாம்பிற்கு அத்தவளையை உணவாக உண்பதன் மூலம் கிடைக்கிறது. கடைசியாக இந்த பாம்பை கழுகு உணவாக உண்பதன் மூலம் ஆற்றலை பெறுகிறது. ஆக, ஆற்றல் அடிப்படையாக சூரிய ஒளி மூலம் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதால் ஆற்றல் உற்பத்தியானது நிகழ்கிறது.
நுண்ணுயிர்கள் அழிந்து போன தாவரங்கள் மற்றும் விலங்குகளையும், அதன் கழிவுகளையும் அழித்து, எளிமையான மூலக்கூறுகளாக மாற்றி மண்ணில் சேர்க்கிறது. இந்த எளிய மூலக்கூறுகள் தாவரங்கள் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. இந்த ஆற்றல் திரும்பவும் விலங்குகள் பெறுகிறது. இவ்வாறு ஆற்றல் அடிப்படை நுகர்வோர்களிலிருந்து, உயர்மட்ட வேட்டையாடும் விலங்குகள் வரை செல்லும் ஒரு வட்டப்பதையில் ஆற்றலானது கடத்தப்பட்டு, மீண்டும் மண்ணை அடைகிறது.
ஆற்றல் ஓட்டம்