PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உயிரினங்களுக்கு நீரும், காற்றும் போன்று நிலத்திலுள்ள மண்ணும் அவசியமாக தேவைப்படும் பொருள் ஆகும். மண் வளமாக இருந்தால்தான் பயிர்கள் பெருமளவில் பயிரிட முடியும். வளமான மண்ணிலிருந்துதான் உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை விளைவிக்க இயலும். மண் தோன்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரு 2 1/2"செ.மீ (அ) 1"செ.மீ மண் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
மனித நடவடிக்கைகள் நீரும், காற்றும் மாசடைந்தது போன்று நிலமும் நச்சுத்தன்மை கொண்ட கழிவு பொருட்களால் மாசுப்படுகிறது. வயல்களில் மிக அதிகமாக பூச்சிக்கொல்லிகள் மருந்துகள் மற்றும் கனிம உரங்களைப் பயன்படுத்துவதாலும், சுரங்கத் தொழிற்சாலைகளில் நிலத்தைத் வெட்டி அதில் காணப்படும் உலோகம் மற்றும் கனிம வளங்களை வெளியே எடுப்பதாலும், தொழிற்சாலைகளாலும், வீட்டில் பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உடைந்த மின்னணு சாதனங்களாலும், இவை அனைத்தும் கடைசியில் நிலத்தை அடைவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது.
 
beach49144031280jpg.jpg
நில மாசுபாடு
  
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ மண் பயன்படுகிறது ஆனால் நில மாசுபாடு காரணமாக அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது அதாவது நிலத்தில் உள்ள மாசுக்கள் மழை பெய்யும் போது மழை நீரில் சேர்கிறது. இந்த நீரைத் தாவரங்கள் உறிஞ்சும் மேலும் இதில் உள்ள வேதிப்பொருள்கள் தாவரங்கள் தயாரிக்கும் உணவிலும் சேர்கிறது இதை மனிதன் சாப்பிடும் போதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
 
நில மாசுபாட்டிற்கு எவ்வாறு தீர்வு காண்பது:
 
1. கழிவுகள் உருவாவதைக் குறைக்க வேண்டும்.
2. கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துதல் நில மாசுபடுதலை தவிர்க்க முடியும்.
3. அனைத்து இடங்களிலும் குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை அதில் போட வேண்டும்.
4. கழிவுகளை திறந்த வெளியில் எரிக்கக் கூடாது, அப்படி எரிப்பதால் அதில் உள்ள சாம்பல் நிலத்தில் கலக்கும் அதனால் எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒலி மாசுபாடு (Noise Pollution)
அதிகமான ஒலியை கேட்பதன் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் மனச்சோர்வு (Discomfort) மற்றும் மன அமைதியின்மை (Restlessness) ஒலி மாசுபடுதல் என்கிறோம்.
ஒலி மாசுபாடு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இது இயற்கையாகவும், மனித நடவடிக்கைகள் மூலமாக ஏற்படும். மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் போன்ற மனித செயல்பாடுகளால் ஒலி மாசு தோற்றுவிக்கப்படுகிறது. அதிக அழுத்தமும் தீவிரமும் கொண்ட ஒலியைத்தான் மாசுபட்ட (Noise) ஒலியாகக் கருதப்படுகிறது. ஒலி அளவானது டெசிபல் (Db) என்ற அலகால் அளவிடப்படுகிறது.
 
noisepollution35839151280.png
ஒலி மாசுபாடு
 
உயிரினங்கள் அனைத்தும் அமைதியான மற்றும் அதிக சத்தம் இல்லாத இடத்தில் வாழவே விரும்புகிறது. அதிக சத்தம் யாருக்கும் பிடிப்பதில்லை. தொடர்ந்து வரும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கும் மேலும் நிம்மதியாக படிக்க முடிவதில்லை.
Example:
சத்தமான இசை, மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகிறது.
அதிக ஒலியால் ஏற்படும் பாதிப்புகள்:
  • தொடர்ந்து வரும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கும் மேலும் நிம்மதியாக படிக்க முடிவதில்லை.
  • அதிக சத்தம் (அல்லது) அதிக சத்தத்துடன் வரும் பாடல்கள் போன்றவை காதுகளைப் பாதிக்கின்றன.
  • இரைச்சலால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் கேட்கும் திறன் போன்றவை மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
  • அதிக ஒலி மாசுபாடு நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு, குறிப்பாகப் பறவைகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • கடலுக்கடியில் வாழும் திமிங்கலங்கள் கப்பலிலிருந்து வரும் சத்தத்தினால் தங்கள் போகும் பாதையிலிருந்து திசை மாறுகிறது.
ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைப்பது:
 
1. மின் கருவிகள் அல்லது மின் சாதனங்கள் பயன்படாத நேரங்களில் அணைத்து வைக்க வேண்டும்.
2. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளிலிருந்து வரும் ஒலியின் அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
3. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களை, பயன்படும் போது மட்டுமே அதனை ஒலிக்க செய்யலாம்.
4. பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. அதிக சத்தம் போட்டு பேச வேண்டாம்.