PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பாடத்தில் நாம் பலதரப்பட்ட தாவரங்களின் பொருளாதாரப் பயன்பாடுகள், அவை மனிதர்களுக்குப் பயன்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்போம்.
தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அடிப்படையில், ஆறு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
  1. உணவுத் தாவரங்கள்
  2. நறுமணத் தாவரங்கள்
  3. மருத்துவத் தாவரங்கள்
  4. நார்த் தாவரங்கள்
  5. மரக்கட்டை தரும் தாவரங்கள்
  6. அலங்காரத் தாவரங்கள்
உணவுத் தாவரங்கள்
மனிதர்களுக்கு தேவையான உணவு கிடைப்பதற்காக ஆதாரமாகத் தாவரங்கள் விளங்குகிறது. ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆற்றலினை உணவின் வழியாக தரும் தாவரங்களை நாம் உணவுத் தாவரங்கள் என்கிறோம்.
நீங்கள் உங்கள் வீட்டில் காய்கறித் தோட்டம் இருந்தால் காய்கறிகள் எவ்வாறு தோட்டத்திலிருந்து சேகரிப்பதைப் பாருங்கள் மேலும் தாவரங்களின் எந்த பகுதி உணவாகப் பயன்படுகிறது.
 
தாவரத்தின் பல்வேறு பாகங்களில் உணவை சேமித்து வைக்கிறது. அவை வேர், தண்டு, இலை, விதை, காய் மற்றும் கனி ஆகும். மேலும் இவைகளை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வாழ்கிறது.
 
உணவுத் தாவரங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
  1. காய்கறிகள்
  2. தானியங்கள்
  3. பருப்பு வகைகள்
மேலும் தாவரங்களின் மூலப்பொருள்களிருந்து காபி, தேநீர், சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்றவை பெறப்படுகிறது.
 
1. காய்கறிகள்
 
காய்கறிகளை தாவரத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது.
 
i. வேர்களில் இருந்து பெறப்படுவை
Example:
பீட்ரூட், கேரட், டர்னிப், சர்க்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, முள்ளங்கி
fishscales1w3264.jpg
வேர் காய்கறிகள்
  
ii. இலைகளில் இருந்து பெறப்படுவை
Example:
கீரைகள், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை
BeFunkycollage6.png
இலை காய்கறிகள்
  
iii. தண்டுகளில் இருந்து பெறப்படுவை
Example:
கரும்பு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு
BeFunkycollage7.png
தண்டு காய்கறிகள்
 
v. மலர்களில் இருந்து பெறப்படுவை
Example:
வாழைப்பூ, காலிபிளவர்
BeFunkycollage8.png
மலர் காய்கறிகள்
  
2. தானியங்கள்
 
தானியம் என்பது புல் வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களைக் குறிப்பதாகும். (தாவரவியல் முறைப்படி இவை உலர் வெடியாக்கனி அல்லது காரியாப்சிஸ் வகைக் கனி ஆகும்.)
Example:
நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை
BeFunkycollage9.png
தானியங்கள்
  
3. பருப்பு வகைகள்
 
பருப்பு வகைகள் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் அந்த தாவரங்களில் உள்ள விதைகளே உண்ணக்கூடிய பருப்புகள் எனப்படுகிறது. ஒரு கனி உறையினுள் பருப்புகள் காணப்படும்.
Example:
கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு
1024pxCollageofPulsesfromKolliHillsw846.jpg
பருப்பு வகைகள்
 
Important!
இந்தியா உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. 2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளி விபரம் அடங்கிய என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டது. அதில் விவசாயத்தில் காய்கறிகளை விட பழங்களை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reference:
https://www.flickr.com/photos/30478819@N08/50717094131/in/photostream/
https://www.flickr.com/photos/rachelfordjames/3793450703/
https://www.flickr.com/photos/47108884@N07/8444618164
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Collage_of_Pulses_from_Kolli_Hills.jpg/1024px-Collage_of_Pulses_from_Kolli_Hills.jpg