PDF chapter test TRY NOW

இந்த பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்பிலும் ஏன், நீரிலும் கூட தாவரங்கள் வளர்ந்து இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் வாழ வழி செய்கிறது. மிகச் சிறிய பாசி வகைகளில் இருந்து \(100\) மீட்டர் (\(330\) அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை இயற்கையில் பல்வேறு தாவர வளங்கள் காணப்படுகிறது. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவம் போன்ற தங்கள் தேவைகளுக்காக நேரடியாக அல்லது மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன.
 
earth29238171280.jpg
பூமி
 
தாவரங்கள் நாம் வாழும் சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருக்க உதவும். மேலும், வீட்டுக்கு பயன்படும் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் உற்பத்தி மற்றும் வணிகத் தேவைகள் போன்றவற்றிற்காக மனிதன் தாவரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறான்.
 
தாவரங்கள் ஒரு நாட்டிற்கு அதிகளவு பொருளாதார வளங்களைத் தருகிறது. உண்மையில் ஒரு நாட்டில் உற்பத்தியாகும் வேளாண்மைப் பொருட்கள் மற்றும் அந்நாட்டின் தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் கொண்டு அந்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது.
 
2048pxElementsofbiodiversity.png
உயிரனங்களின் பண்முகத்தன்மை
மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையே காணப்படும் தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதாரத முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.
பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் அதிகளவு மக்கள் அரிசி, கேழ்வரகு, மற்றும் கம்பு போன்ற தானிய வகைகளை முக்கிய உணவாகப் பயன்படுத்தினார்கள் என்று அகழ்வாராய்ச்சிகளின் மூலம் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலம் நாம் அறிய முடிகிறது. மேலும், பண்டையக் கால இலக்கியத் தகவல்களின் மூலம் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல தாவரங்கள் எவ்வாறு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்.
 
இதை விட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்து மடிந்த தாவரங்களின் மிச்சங்களிலிருந்து தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகியவை கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. மேலும் பில்லியன் வருடங்களாக தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்சிஜன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர் வகைகள் தோன்றத் தொடங்கியது.
 
தாவரங்களால் மண்சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம்தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Elements-of-biodiversity.png