PDF chapter test TRY NOW

விலங்கு- தாவர இடைவினையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக?
 
விலங்குகள் தங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் போன்ற அனைத்திற்கும் தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இந்த வகை உறவினால் விலங்குகள் மற்றும் தாவரங்கள் இரண்டுமே பயனடைகின்றன. இத்தகைய உறவு வணிக ரீதியாக அவசியமாக உள்ளது.
 
எடுத்துக்காட்டு:  மல்பெரி இலைகளை உணவாக உட்கொண்டு மல்பெரி தாவரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது. இது ஒரு புழுவிற்கும் தாவரத்திற்கும் இடையே உள்ள தொடர்பு வணிக ரீதியில் பட்டு தயாரிக்க உதவுகிறது.
 
 தாவரங்களில் நடைபெற விலங்குகள், பூச்சிகள், மற்றும் பறவைகளின் தேவை மிக முக்கியமான ஒன்றாக்கும். மலர்களில் காணப்படும் அழகிய வண்ணங்கள், மணம் மற்றும் தேன் ஆகியவை பூச்சிகளை கவர்ந்து இழுக்க இயற்கையிலே உருவாகியுள்ளது. இப்பூச்சிகள் ஒரு பூவிலிருந்து வேற பூவிற்கு செல்லும் போது தங்களின் உடலில் ஒட்டி இருந்த மகரந்தத்தூள்களை விட்டுச் செல்கிறது. இதனால் மகரந்தச்சேர்க்கை என்ற நிகழ்வு நடைபெற்றுக் காய்கறிகள் மற்றும் பழங்களை உருவாகிறது.
 
இயற்கையில் சிறந்த உற்பத்தியை கிடைக்க இவ்விதம் அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் பூச்சிகளையும், பறவைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாகும். அயல் மகரந்தச் சேர்க்கைக்கு  உதவுவதோடு, நமக்கு தேனையும் தருகிறது.
 
கடலில் வாழும் மீன்களுக்கு  காணப்படும் பாசிகளும் தாவரங்களும் உணவாக பயன்படுகிறது. அவ்விடங்களில் மீன்பிடித்தல் பணி சிறப்பாக செயல்படுகிறது.
 
இயற்கையில் விலங்குகளும் பறவைகளும் பல தாவரங்களின்  பரவ முக்கிய காரணமாக உள்ளன. பறவைகளின் வயிற்றில் காணப்படும் செரிமான என்சைம்கள் விதைகளின் மேலுறையை மென்மையாக்கி அவைகளை எளிய வகையில் நிலத்தில் தோன்ற காரணமாக அமைகிறது. விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இயற்கையாக உள்ள உறவுகள் பாதிப்பு ஏற்படும் போது வணிக ரீதியான விளைவுகளும் தோன்றுகிறது.