PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் சென்ற வகுப்பில் கணினியின் வரலாறு, அதன் பாகங்கள் கணினியின் பயன்பாடு பற்றி படித்தோம். இங்கு, நாம் கணினியின் வன்பொருள்மற்றும் மென்பொருளைப்பற்றி அறிந்துக் போகிறோம்.
 
கணினியைப் பற்றி மாணவர்களுக்கும், ஆசிரியாருக்கும் இடையே நடைப் பெற்ற உரையாடலை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஆசிரியர்: மாணவர்களே! சென்ற வகுப்பில் நாம் கணினியியைப் பற்றி அறிந்துக் கொண்டோம். அதில் ஏதேனும் உனக்கு ஐயம் இருக்கிறதா?
 
மாணவன்: ஆம் ஐயா! நமக்கு கணினி எதற்கு கண்டுபிடிக்கப்பட்டது?
 
ஆசிரியர்: கணினி என்பது நமது தேவைகளுக்கு ஏற்ப தரவு மற்றும் தகவல்களை மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
  
மாணவன்: அப்படி என்றால், கணினி எவ்வாறு அனைவருக்கும் தேவையான அனைத்து தகவல்களைக் கொடுக்கிறது?
 
1.jpg2.jpg
கணினி மற்றும் அதன் பாகங்கள்
 
ஆசிரியர்: இல்லை. கணினி என்பது அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட வழிமுறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு மின்னணு சாதனமாகும்.
  
மாணவன்: கணினியில் நினைவகம் எங்குள்ளது?
  
ஆசிரியர்: கணினி வன்பொருள்(HARDWARE) எனும் சில பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் வன்பொருளில் தன் நினைவகம் உள்ளது.
  
மாணவன்:  கணினிக்கு வழிமுறைகள் எப்படி அளிக்கப்படுகிறது?
  
ஆசிரியர்: கணினியில் வன்பொருளை போன்று மென்பொருள்(SOFTWARE) எனும்  மற்றொரு பெரும் பகுதிகளைக் கொண்டு இருக்கும்.
  
மாணவன்: வன்பொருள் மற்றும் மென்பொருள் என்றும் இரு பகுதிகளை குறிப்பிடுகிறீர்கள். இவைகளில் எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது? கணினி இயங்க எது மிகவும் அவசியம்? 
 
ஆசிரியர்: இவ்விரு பகுதிகளும் ஒன்றையொன்று தவிர்த்து கணினி செயல்படுவதில்லை. வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடுகள் இணைந்து தான் கணினியை செயல்பட வைக்கிறது. எனவே, கணினி இயங்க இரண்டும் அவசியம்.
  
மாணவன்: அப்படி எனில் நமது உடல் உயிர் போன்றா?
  
ஆசிரியர்: ஆம். வன்பொருள் மனித உடலைப் போன்றும், மற்றும் மென்பொருள் ஆன்மாப் போன்றும் செயல்படுகிறது.
  
மாணவன்: ஐயா! வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க முடியுமா?
  
ஆசிரியர்: இனி வரும் அடுத்து அடுத்த பகுதியில் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ளப் போகிறோம்.