சென்றப்பகுதியில் வன்பொருளைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இப்பகுதியில் மென்பொருள் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
  
கணினியிக்கு வன்பொருள் தான் இருக்கிறது அல்லவா? மென்பொருள் அவசியமா?
 
ஆம். கணினிக்கு மென்பொருள் அவசியம் ஆகும். மென்பொருள் இல்லாமல் வன்பொருள் மட்டும் ஒரு முழு கணினியாக முடியாது.
 
shutterstock432008923.jpg
கணினியின் மென்பொருள்
  
கணினியில் மென்பொருளின் செயல்பாடு என்ன?  
 
மென்பொருள் என்பது வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய, கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
 
வன்பொருளைப்போன்று நம்மால் மென்பொருளை தொட்டு உணர முடியுமா?
 
இயலாது. ஆனால், கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த இயலும்.
 
Important!
இணையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்தது.
 
Jarretera Shutterstock.jpg
மின்னஞ்சல்
அனைத்துக் கணினியிலும் ஒரே மாதிரியான மென்பொருள்களை நாம் பயன்படுத்துக்கிறோமா? இல்லை வெறுபடுமா? என்பது பற்றி அடுத்தப்பகுதியில் மென்பொருள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் எப்படி வகைப்படுத்தப்படுத்தலாம். என்பது பற்றி அறிந்துக் கொள்ளலாம்.