PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் நீரினை \(H_2O\) என்று எழுதுகின்றோம். இது நீர் மூலக்கூறின் வேதியியல் வாய்ப்பாடாகும். இதன் பொருள் நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுவும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் உள்ளன என்பதாகும்.
 
Asset 4.png
 
வேதியியல் வாய்ப்பாடு என்பது தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும். இது ஒரு தனிமத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்குகிறது. சமையல் உப்பின் வேதிவாய்ப்பாடான \(NaCl\) ல் தனிமங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கையை உங்களால் யூகிக்க முடிகிறதா?
வேதியியல் வாய்ப்பாடு என்பது  அணுக்களின் வகைகளையும், ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும் சுருக்கமாக நமக்குத் தெரிவிக்கிறது.
தண்ணீர் (\(H_2O\))
 
Asset 8.png
Example:
H குறியீட்டின் அருகிலுள்ள சிறிய எண்  கீழ்க்குறியீடு என அழைக்கப்படுகிறது. இது அத்தனிமத்தின் மூலக்கூறுக்குள் இருக்கும் அணுவின் எண்ணிக்கையை நமக்குச் சொல்கிறது. எனவே, நீர் மூலக்கூறில் 2 ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. O குறியீட்டின் அருகில் எந்த ஒரு எண்ணும் இல்லை, இது தனிமங்களில் இருக்கும் மூலக்கூறுக்குள் ஒரு அணு மட்டுமே  உள்ளது என்று பொருள். எனவே, நீர்  மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு மட்டுமே  உள்ளது.
 
வேதியியல் வாய்ப்பாட்டிற்குச் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
சோடியம் குளோரைடு - \(NaCl\)
\(1\) சோடியம் அணு மற்றும் \(1\) குளோரின் அணு
  
அம்மோனியா - \(NH_3\)
\(1\) நைட்ரஜன் மற்றும் \(3\) ஹைட்ரஜன் அணுக்கள்
  
குளுக்கோஸ் - \(C_6H_1{_2}O_6\)
\(6\) கார்பன் அணுக்கள், \(12\) ஹைட்ரஜன் அணுக்கள், \(6\) ஆக்சிஜன் அணுக்கள். 
 
சேர்மங்களுக்கான உதாரணங்கள்:
  
சேர்மங்களின் வாய்ப்பாடு
பெயர்கள்
\(C_2H_6O\)
எத்தனால்
\(H_2SO_4\)
கந்தக அமிலம்
\(CH_4\)
மீத்தேன்
\(C_1{_2}H_2 {_2}O_1{_1}\)
சுக்ரோஸ்