PDF chapter test TRY NOW

ஒரு பொருளின் மேற்பரப்பின் அளவு அதனுடைய  "பரப்பளவு" எனப்படுகிறது.
பரப்பளவு=நீளம்×அகலம்பரப்பளவின் அலகு=மீட்டர்×மீட்டர்=மீட்டர்2()சதுரமீட்டர்=மீ2
 
இதனை, சதுரமீட்டர் எனப் படிக்க வேண்டும்.
இங்கு, பரப்பளவு என்பது அடிப்படை அளவான நீளத்தினை இருமுறை பெருக்கிக் கணக்கிடப்படுவதால் பரப்பளவு ஒரு "வழி அளவாகும்".
    Important!
  • ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைப்படும் பரப்பாகும். 
  • பரப்பளவு என்பது சதுர மீட்டரில் குறிக்கப்பட்டாலும் பரப்பு சதுர வடிவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவு
  
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பை, தகுந்த சூத்திரங்களின் மூலம் கணகிடலாம். ஒரு சில ஒழுங்கான வடிவமுள்ள, தள பொருள்களின் பரப்பைக் காண்டறிய உதவும் சூத்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. சதுரம்
 
பக்கம் ×பக்கம் =a×a=a2
11.png
 
2. செவ்வகம்
 
நீளம் ×அகலம் =l×b=lb
10.png
 
3. வட்டம்
 
Π×r2=Π×ஆரம் Π×r×rΠr2
3 (2).png
 
4. முக்கோணம்
 
(12)×அடிப்பக்கம் ×உயரம் (12)×b×h(12)bh
2 (2).png