PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாலில்லா இனப்பெருக்கம் என்பது சில தாவரங்கள் விதைகள் இல்லாமல், மற்ற உடல் பாகங்கள் மாறும் நிகழ்வுகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் ஆகும்.
இவ்வகை இனப்பெருக்கம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை,
உடல் இனப்பெருக்கம்
தாவரத்தின்  உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறும்.
  • உருளைக்கிழங்கு கணு மற்றும் மொட்டிலிருந்து உருவாகும்.
  • கரும்பும், சேனைக்கிழங்கும் தண்டிலிருந்து வளரும்.
Shoots types.png
தாவரங்களில் உடல் இனப்பெருக்கம்
மொட்டு விடுதல்
ஒரு சில உயிரினங்கள் சிறிய மொட்டினை உருவாக்கும். அது படிப்படியாக வளர்ந்து தாயின் உடலிருந்து விட்டுப் பிரிந்து புதிய உயிரியை உருவாக்கும்.
 
10.png
ஈஸ்டில் மொட்டு விடுதல் நிகழ்வு
துண்டாதல்
சில உயிரினங்கள் முதிர்ச்சி அடையும் போது பல துண்டுகளாக உடைந்து பிறகு ஒவ்வொரு துண்டும் புதிய உயிரினங்கள் உருவாக்கும்.
 
9 (1).png
ஸ்பைரோகைராவில் துண்டாதல் நிகழ்வு
ஸ்போர் உருவாதல்
பூவாத் தாவரங்கள் என்பன தண்ணீர் பற்றாக்குறை, உயர் வெப்பநிலை, மண்ணில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள சாதகமற்ற சூழ்நிலைகளில் வாழும் போது ஸ்போர் மூலம் மற்றொரு புதிய தாவரத்தை உருவாக்குகின்றன.
Example:
பாசிகள், பிரையோஃபைட் மற்றும் டெரிடோஃபைட் (பேரணிகள்)
4 (1).png
பாசிகளில் ஸ்போர் உருவாதல் நிகழ்வு