PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google PlayTheory:
ஒரு மலரின் குறுக்கு வெட்டு தோற்றதை பாக்கலாம். இதில், பெண் கேமீட் எனப்படும், சூல்கள் எங்கே அமைந்துள்ளன? சூல்களை நாம், சூலகத்தின் உள்ளே காணலாம். இப்பொழுது, கருவுறுதல் பற்றிக் காணலாம்.

பூவின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
ஆண் கேமீடும் (மகரந்தத்தூள்) மற்றும் பெண் கேமீடும் (சூல்கள்) இணையும் நிகழ்வு கருவுறுதல் எனப்படும்.
மகரந்தச்சேர்க்கைக்கு பிறகு மகரந்தத்தூள் மகரந்தக்குழலை உருவாகும். பின் மகரந்தக்குழல் ஆண் கேமீட்களை சூலகத் தண்டு வழியே சூற்பையில் உள்ள பெண் கேமீடுடன் இணைகிறது.

தாவரங்களில் கருவுறுதல் நிகழ்வு
மலர் கருவுற்றுக் கனியாகும் போது நடைபெறும் மாற்றங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
• சில கனிகளில் புல்லி வட்டம் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்.
• அல்லிகள் கீழே உதிரும்.
• மகரந்தத்தாள் வட்டமும் உதிரும்.
• சூற்பை கனியாக மாறும்.
• சூலகத் தண்டும் சூற்பையும் உதிரும்.
• சூலகம் பருத்து, உணவைச் சேமித்துக் கனியாக உருவாகிறது.
• சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறும்.

சில கனிகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
Important!
சில தகவல்கள்:
- சேசில்லிஸ் (Seychelles) என்ற தீவில் உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை, இரட்டைத்தேங்காய் ஆகும். இதன் எடை \(18\) கிலோ, மேலும் இந்த இடத்தில் மட்டுமே இந்தத் தேங்காய் காணப்படும்.
- உலகின் மிகச் சிறிய எடையுள்ள விதைகள் ஆர்க்கிட் விதைகளாகும். \(35\) மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை \(25\) கிராம் மட்டுமே இருக்கும்.
கனிகளின் வகைகள்
1. தனிக் கனி
தனிக் கனி என்பது, ஒரு விதை மட்டுமே கொண்டிருக்கும்.
Example:
மாம்பழம்
2. திரள் கனி
பல கனிகள் ஒன்றிணைந்து உருவாவது, திரள் கனி ஆகும்.
Example:
சீதாப்பழம்