PDF chapter test TRY NOW

ஒரு மலரின் சூலகமுடியை, மகரந்தத்தூள் சென்றடையும் நிகழ்வு மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இரு இரு வகைப்படும். அவை, பின்வருமாறு
  • இயற்கை மகரந்தச்சேர்க்கை - இயற்கையாக அல்லது பல்வேறு முறையில் ஒரு ஆண்மலரில் உள்ள மகரந்த்தூள்கள்  பெண்மலரின் சூலகமுடியை சென்றடையும் நிகழ்வு.
  • செயற்கை மகரந்தச்சேர்க்கை - செயற்கையான முறையில் ஒரு ஆண்மலரில் உள்ள மகரந்த்தூள்கள் பெண்மலரின் சூலகமுடியை சென்றடையும் நிகழ்வு.
6.png
தன் மற்றும் அயல் மகரந்தச்சேர்க்கை
Example:
புற்களில் மகரந்தப்பை, மகரந்தத்தூளை உதிர்க்கும் போது அதைக் காற்று எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கும்.
வேறுபாடுகள்
தன் மகரந்தச்சேர்க்கை
  • ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரில் உள்ள சூலகமுடியை அடையும் அல்லது அருகில் உள்ள மற்றொரு மலரின் சூலகமுடியை சென்றடையும்.
  • அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தியாக வேண்டியது இல்லை.
  • புதிய தாவரங்களில் வேறுபாடு இருக்காது.
  • எ.கா: ஃபேபேஸி (அவரை), தக்காளி (சொலானேசி), நெல்லிமரம்
அயல் மகரந்தச்சேர்க்கை
  • ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள், மற்றொரு மலரின் சூலகமுடியை அடையும்.
  • அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படும்.
  • எ.கா: ஆப்பிள், ஃபிளம்ஸ், ஸ்ட்ரா ஃபெர்ரி, பூசணி
சேர்க்கையாளர்கள்
பூச்சிகள் , பறவைகள், விலங்குகள், காற்று மற்றும் நீர் இவ்வாறு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்து நிகழ்வுகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படும்.
7 (1).png
சேர்க்கையாளர்கள்