PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google PlayTheory:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. நம் வாழ்வின் மிக முக்கியமான அம்சம் நமது ஆரோக்கியம். உடல்நலம் தான் மனித வாழ்வின் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. நாம் எல்லா செல்வங்களும் நிறைவாய் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆரோக்கியத்துக்கான விளக்கப் படம்
ஆரோக்கியம்
நீண்ட காலமாக, உடல் மற்றும் மனதின் நிலை ஆரோக்கியம் என விவரிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தைப் பின்வருமாறு வரையறுத்துள்ளது:
உடல்நலம் என்பது நோய்கள் அல்லது குறைபாடுகள் இல்லாததை விட உடல், மன மற்றும் சமூக நல வாழ்வின் ஒட்டுமொத்த நிலை என வரையறுக்கப்படுகிறது.

ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு பதாகைகளைச் சுமக்கும் மக்கள்
நோய் இல்லாதவர் ஆரோக்கியமானவர் என்று அறியப்படுகிறார். அப்படியானால் நோய் என்றால் என்ன?
உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நோய் என்று அழைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையைக் காட்டும் படம்
நோய் எதனால் ஏற்படுகிறது?
வெவ்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு பின்னணியைச் சார்ந்த மனிதர்கள் நோய்க்கான காரணங்கள் பல்வேறு வழிகளில் ஏற்படுகின்றன என்று கூறுகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?
நம்மைச் சுற்றி வாழும் பெரும்பாலான மக்கள் நோய்க்கான காரணங்களை தங்கள் சொந்த அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையிலிருந்து அணுகுகிறார்கள். அப்படியானால், குறிப்பிட்ட நோய்க்கான மூல காரணத்தைப் பற்றி யார் சொல்வது சரி என்ற கேள்வி நம்மிடையே எழ வேண்டும்? அப்பொழுது தான் நாம் நோய்க்கான உண்மை காரணிகளை அறிந்து அதற்கான தடுப்பு முறைகளை அறிந்து சரி செய்து கொள்ள முடியும்.
வயிற்றுப்போக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படுவதாகப் பலர் கூறினாலும், நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகள், நல்ல தண்ணீர் வசதியின்மை அல்லது சரியான சுகாதாரம் இல்லாமை தான் வயிற்றுப்போக்குக்கான மிக முக்கிய காரணிகளாகும்.

நோய்க்கிருமிகள் பெருங்குடலைப் பாதித்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் விளக்கப் படம்
நோயைத் தடுக்கவும், வெற்றிகரமாக சிகிச்சையளிக்கவும், நோய் பற்றிய முழுமையான புரிதல் வேண்டும். நோயையும், அதற்குக் காரணமான பல்வேறு காரணங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இந்த பாடம் நமக்கு உதவுகிறது.
கற்றல் நோக்கங்கள்:
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் கற்றுக்கொள்ளவிருப்பது,
- உங்கள் உடலை எவ்வாறு கவனித்துக் கொள்வது?
- உங்கள் பற்கள், கண்கள், முடி இவற்றை எப்படி, எவ்வாறு பராமரிப்பது?
- சுகாதாரமான பழக்கங்களை எப்படிப் பின்பற்றுவது?
- தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களை எவ்வாறு புரிந்து கொள்வது?
- சில பொதுவான நோய்களையும் அவற்றைச் சரி செய்யும் தீர்வுகளையும் எவ்வாறு அறிந்து புரிந்து கொள்வது?
- முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து எப்படி உதவுவது?