PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google Playகண்கள் நம் உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பாகும். இவை நாம் வாழும் அழகான உலகினை காண்பதற்குப் பயன் பாடும் சாளரங்களாகக் கருதப்படுகின்றன. உடலில் வெவ்வேறு புலன்கள் காணப்பட்டாலும், கண்பார்வை என்பது மிக முக்கியமான உணர்வு. ஏனெனில், நாம் பார்வை மூலமாகவே \(80\)% உணர்வுகளை உணர்கிறோம் . அதனால் கண்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும்.

மனிதக் கண்
எனவே, நோய்கள், தட்பவெப்பம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து கண்களைப் பாதுகாப்பதால் குருட்டுத்தன்மை மற்றும் பார்வை இழப்பின் முரண்பாடுகளைக் குறைக்க இயலும்.
ஆரோக்கியமான கண் பார்வைக்குச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
- வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்து நிறைந்த உணவுகள்
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது மற்றும் கண்களில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.

உடற்பயிற்சி செய்யும் பெண்
- உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, கண்களுக்கும் ஓய்வு தேவை. எனவே உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொரு இரவும் போதுமான அளவு தூங்க வேண்டும்.

தூங்கும் சிறுவன்
- சுத்தமில்லாத கைகளால் கண்களைத் தொடுவது அல்லது தேய்ப்பதனால் நோய்கள் வரக்கூடும் என்பதால் தொடர்ந்து கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

கைகளைச் சுத்தமாக கழுவுதல்
- புகைபிடிப்பதால் கண் சம்பந்தப்பட்ட நோய்களான நீரிழிவு ரெட்டினோபதி, கண்புரை மற்றும் உலர் கண் நோய்க்குறி வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும்.

புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்
- புற ஊதா கதிர்வீச்சிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்கள் அணிய வேண்டும்.

குழந்தைகள் தங்கள் கண்களை சன்கிளாஸ்களால் பாதுகாக்கும் காட்சி