PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google PlayTheory:
நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
சில நுண்ணுயிரிகள் நோய்களை ஏற்படுத்துவதால் "நோய்க்கிருமிகள்" என்றழைக்கப்படுகின்றன. இவை விலங்குகள், மனிதர்கள் மற்றும் தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.

நோய் உருவாக்கும் கிருமிகள்
நோய்க்கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன?
வெளிப்புற சூழலிலிருந்து நோய்க்கிருமிகள் நம் உடலில் பல்வேறு வழிகள் மூலமாக உட்செல்கிறது. நுண்ணுயிரிகள் மாசுபடுத்தபட்ட நீர், காற்று, உணவு, கொசு, மலம், விலங்குகள் கடிப்பது, அசுத்தமான மண் , உடல் தொடர்பு, பாதிக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் மூலமாக நோய்க்குக் காரணமான கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றன.

நோய் பரவும் விதங்கள்
பொதுவான தொற்று நோய்களாகச் சளி மற்றும் காய்ச்சல் கருதப்படுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இரண்டும் இந்த நோய்களை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளாகும்.
ஒருவருக்குச் சளி மற்றும் காய்ச்சல் இருந்தால், அவருக்கு நாசியில் ஒழுகுதல், இருமல், தொண்டை வலி மற்றும் சில சமயங்களில் காய்ச்சல் அல்லது மூட்டு வலி போன்ற அறிகுறிகளும் காணப்படும். சில சூழ்நிலைகளில், வயிற்றுப்போக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சளி மற்றும் காய்ச்சிலுக்கான அறிகுறிகள்
நாசியிலிருந்து ஒழுகும் சளியில் நோய்க் கிருமிகளான பாக்டீரியா அல்லது வைரஸ்கள் இருக்கலாம். இந்த நேரங்களில் நோய்வாய் பட்டவர் தன் நாசியைத் தொட்ட பின் வேறு ஏதேனும் பொருளையோ அல்லது நபரையோ தொடும்போது, வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது.
சளியினால் அவதிப்படும் நோயாளியின் தும்மல் அல்லது இருமலிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் நோயை உண்டு பண்ணும் வைரஸ் இருக்கும், அவை காற்றில் பரவி எண்ணற்ற மனிதர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தும்மல் மூலம் வெளியேறும் நீர்த் துளிகள் பரவும் விதம்
எனவே ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதன் மூலமும், அடிக்கடி கைகளை கழுவதன் மூலமும் உறுதியாக வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க முடியும்.

நோய்வாய்ப்பட்ட குழந்தை கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்தும் படம்