PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google Playபல விஞ்ஞானிகள் அணுவின் அமைப்பை ஆய்வு செய்து தங்கள் கொள்கைகளை வெளியிட்டனர். அவற்றுள் முக்கியமானவை.
- டால்டன் அணுக்கொள்கை
- தாம்சன் அணுக்கொள்கை
- ருதர்போர்ட் அணுக்கொள்கை

ஜான் டால்டன்
\(1808\) ஆம் ஆண்டு ஜான் டால்டன் தன் அணுக்கொள்கையை வெளியிட்டார்.
- அனைத்து பருப்பொருள்களும் பிளக்க இயலாத மிகச் சிறிய துகள்களால் ஆனது என்றார். அத்துகளை டால்டன் அணு என அழைத்தார். அணுக் கோள வடிவம் கொண்டது, அதுவே மிகச் சிறிய துகள், அதை பிளக்க இயலாது என்றார்.
- அணுக்களுக்குள் இருக்கும் நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்களைப் பற்றி எவ்வித விளக்கத்தினையும் அளிக்கவில்லை.
- இதன் காரணமாக டால்டனின் அணுக் கொள்கையால் பருப்பொருளின் பல பண்புகளை விளக்க இயலவில்லை.
தாம்சன் அணுக்கொள்கை

ஜே. ஜே. தாம்சன்
ஜே. ஜே. தாம்சன் 1897 ஆம் ஆண்டு தன் அணுக்கொள்கையை வெளியிட்டார். அணுவை தர்பூசணிப் பழத்துடன் ஒப்பிட்டார்.


தர்பூசணி அணு மாதிரி
- அணுவின் நேர் மின்னூட்டம் கொண்ட பகுதியை தர்பூசணியின் சிகப்பு பகுதியுடன் ஒப்பிட்டார், தர்பூசணியின் விதைகள் எப்படி சிகப்பு பகுதியின் மீது பதிந்து உள்ளதோ அதைபோலவே எதிர் மின்னூட்டங்கள், நேர் மின்னூட்டம் கொண்ட பகுதி மீது பதிந்து உள்ளது என்றார்.
- இந்த எதிர் மின்னூட்டங்களை தாம்சன் எலக்ட்ரான்கள் என அழைத்தார்.
- நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் சம அளவில் உள்ளதால் ஒரு அணுவிற்கு எந்த மின் சுமையும் இல்லை என்றார்.
- ஒரு அணுவில் எலக்ட்ரான்கள் இருப்பதை சோதனையின் மூலம் நிரூபித்தார். இதனால் 1906ல் நோபல் பரிசு பெற்றார் .
- ஒரு அணுவிற்கு எந்த மின் சுமையும் இல்லை என்பதற்கான காரணத்தை விளக்கியபோதும், இதில் சில குறைபாடுகள் இருந்தன.
Important!
நானோமீட்டர் என்பது சிறிய நீளங்களை அளக்கப் பயன்படும் அலகாகும். ஒரு நானோமீட்டர் என்பது மீ ஆகும்.