PDF chapter test TRY NOW
இப்பகுதியில் மின்சுற்றுக்களைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அறிந்துக் கொள்வோம்.
நம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்களில் மிகக் கடினமான மின்சுற்றுகள் அமையப் பெற்றிருக்கும். அதிக மின் விளக்குகள், சாவி மற்றும் வேறு மின் உறுப்புகளைக் கொண்ட மின்சுற்றாக இருக்கும். இந்த மின்கூறுகளுடன் கூடிய உண்மையான சுற்றுப்படம் வரைய முடியுமா ?
அது மிக எளிமையான செயலாக இருக்க முடியாது.
அறிவியலாளர்கள் அச்செயலை மிகவும் எளிமையாக்குவதற்கு முயற்சி செய்தார்கள். அதற்காக சுற்றின் பல்வேறு மின் உறுப்புகளைக் குறிப்பிட வடிவம், அமைப்பு மற்றும் எழுத்துகள் மூலம் கொண்ட ஒரு எளிய குறியீடுகளை உருவாக்கினார்கள். அக்குறியீடுகளைப் பயன்படுத்தி நாம் எளிதாக சுற்றுப்படம் வரைய முடியும்.
பொதுவாக, மின்சாரச் சுற்றுகள் இரண்டு வகைப்படும். அவை முறையே
- தொடர் இணைப்பு சுற்று
- இணை இணைப்பு சுற்று
எளிய மின்சுற்று
ஒரு எளிய மின்சுற்று என்பது, தொடர்ச்சியான மற்றும் ஒரு மூடிய பாதை ஆகும்.
எளிய மின்சுற்று
இந்தச் சுற்றில் மின்னோட்டம் நேர்மறை \((+)\) முனையத்திலிருந்து எதிர்மறை முனையை \((-)\) நோக்கி பாயும். பொதுவாகவே ஒரு எளிய மின்சுற்றில் மின்கலன், இணைப்பு கம்பி மற்றும் சாவி ஆகிய எளிய கூறுகளைக் கொண்டிருக்கும்.
தொடர் இணைப்பு சுற்று
தொடர் இணைப்பு மின்சுற்று
-
தொடர் இணைப்பு மின்சுற்றில் மின் கூறுகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக ஒரு சங்கிலி போல அமைந்து இருக்கும்.
-
தொடர் இணைப்புச் சுற்றில், மின்னோட்டம் ஒரே பாதையில் மட்டுமே பாயும்.
-
தொடர் இணைப்பில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் மின்னோட்டம் ஒரே மாதிரியாக பாயும்.
-
இந்தச் சுற்றில் உள்ள உறுப்புகளில், ஏதேனும் ஒன்று பழுதடைந்தாலோ அல்லது துண்டிக்கப்பட்டாலோ, முழுச் சுற்றும் இயங்காது.
-
மேலே உள்ள வரைபடத்தில், இரண்டு மின் விளக்குகளும் தொடர் இணைப்பில் ஒரு சங்கிலி வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மின் விளக்குகளிலும் மின் ஓட்டம் ஒரே மாதிரியாக இருக்கும்.
-
இந்தச் சுற்றில் அதிக பல்புகளைச் சேர்ப்பதால் மின்கலன் அல்லது மின்கல அடுக்கு விரைவில் தேய்ந்துவிடும், மேலும் விளக்கின் பிரகாசமும் குறைந்து விடும்.
-
எனவே, தொடர் இணைப்பில் இணைக்கப்படும் ஒரே அளவில் தோன்றும் மின்விளக்குகள் எப்போதும் ஒரே அளவில் ஒளிர்வதில்லை.
பக்க இணைப்பு சுற்று
- பக்க இணைப்பு சுற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் கூறுகள் இணையாக இணைக்கப்பட்டிருக்கும்,
- பக்க இணைப்புச் சுற்றுக்கு மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகள் இருக்கும்.
- இந்தச் சுற்றில் எந்த உறுப்பு சேதமடைந்தாலோ அல்லது துண்டிக்கப்பட்டாலோ, மற்ற உறுப்புகள் அனைத்தும் எந்த ஒரு சேதமும் இல்லாமல் சரியாக இயங்கும்.
பக்க இணைப்பு மின்சுற்று
மேலே உள்ள வரைபடத்தில், இரண்டு மின்விளக்குகளும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது, மின்சுற்றின் வழியே பாயும் மின்னோட்டம் ஒரே மாதிரியாக இருக்காது.