PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில், பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்புச்சுற்றுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைப் பார்க்கலாம்.
 
தொடர் இணைப்பு
  • மின் மூலமாக மின்கலன் அல்லது மின்கல அடுக்கு பயன்படுத்தப்படும்
  • இணைப்பு கம்பிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
  • ஒற்றை மூடிய மின் இணைப்பு ஆகும்.
  • மின் விளக்கு குறைந்த பிரகாசத்தில் ஒளிறுதல்
  • மின் விளக்குகள் மின் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • ஒரு மின் விளக்கு பழுதனால் மற்ற மின் விளக்குகள் ஒளிறாது
பக்க இணைப்பு
  • மின் மூலமாக மின்கலன் அல்லது மின்கல அடுக்கு பயன்படுத்தப்படும்
  • இணைப்பு கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
  • பல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு ஆகும்.
  • மின் விளக்குகள் அதிக பிரகாசத்தில் ஒளிறுதல்
  • ஒவ்வொரு மின் விளக்கு மின் திறனைப் பெறும்.
  • ஒரு மின்விளக்கு பழுதனாலும் மற்ற மின் விளக்குகள் ஒளிறும்.
YCIND20220805_4002_Electricity_20.png
கட்டுறா மின்னூட்டங்கள்
ஒரு அணுவானது, மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியது ஆகும். இந்த துகள்களில் பெரும்பாலானவை, அணுக்களில் நிலையாக அமைந்திருக்கும். ஆனால், கடத்திகளில் (எல்லா உலோகங்களிலும்) ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றது. அதாவது, அணுக்களின் சில எலக்ட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.
குறுக்கு மின்சுற்று
 
உன் வீட்டருகில் அமைந்திருக்கும் மின்கம்பங்களில் சில நேரங்களில் உருவாகும் தீப்பொறியை  நாம்  பார்த்து இருப்போம். அந்த மின்சார தீப்பொறி உருவாக காரணம் என்ன தெரியுமா? இது மின் பாதையில் ஏற்படும் குறுக்கு மின்சுற்றினால் உருவாகிறது, குறுக்குச் சுற்று என்பது இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று ஆகும்.
 
குறுக்கு மின்சுற்றினால் ஏதாவது உபயோகம் உண்டா?
 
ஆம், உண்டு.
 
வெல்டிங் செய்தல், குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடு ஆகும்.