PDF chapter test TRY NOW

உணவுப்பதார்த்தங்கள் வீணாகும்பொழுது, அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது அல்லவா? இம்மாற்றத்தினை வேதியியல் மாற்றம் எனக் கொள்ளலாமா? வகுப்பறையில் கலந்துரையாடி உமது கருத்துக்களைப் பதிவிடவும்.
  
நாம் அன்றாடம் உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்படுகிறது. பாத்திரங்கள் காலியானதும் அவற்றைச் சுத்தம் செய்கிறோம். ஒரு வேளை மீதமான சிறிதளவு உணவுப் பதார்த்தத்துடன் பாத்திரத்தைக் கழுவாமல் மூடிய நிலையில் ஒரு நாள் விட்டு வைத்து, மறுநாள் அந்தப் பாத்திரத்தைத் திறந்தால் அதிலிருந்து துர்நாற்றம் வீசும். உணவுப் பொருள்கள் கெட்டுப்போதல் என்ற   அங்கு நிகழ்ந்துள்ளது. எனவே மணம் மாறி துர்நாற்றமாவது வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.