PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு ஆகும். ஏனெனில் பால் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது எனவே இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
பால் தயிராதல் என்ற நிகழ்வில் திரவ நிலை பாலானது படிப்படியாக அதன் துகள்கள் இணைந்து கூழ்மநிலைப் பொருளாகச் சேர்ந்து திடநிலை போல் உருவாகிறது.
 
shutterstock1890391174.jpg
பால் தயிராதல்
  
பாலினை உறைய வைத்தல்:
 
i. ஒரு பாத்திரத்தில் சூடான பாலினை எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தயிரினைச் சேர்க்கவும், பால் திரிதல் அடைந்து சிறு சிறு திண்ம நிலை கூழ்மங்களாக உருவாகும்.
 
ii. சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றியும் பாலினைத் திரிய வைக்கலாம், ஆனால் இவ்வாறு திரிதல் அடைந்து பெற்ற தயிரின் சுவை, சில மணி நேரங்கள் எடுத்துக் கொண்டு இயல்பாக, மெதுவாக உரையிட்ட தயிரைப்போல் சுவையும் நயமும் இருக்காது.
உடனடித் திரிதலில் பெற்ற தயிரின் சுவையும், இயல்பாக உறைந்த தயிரின் சுவையிலும் வேறுபாடுகள் காணப்படும்.
நீங்களும் உடனடித் திரிதலில் பெற்ற தயிரையும், இயல்பாக உறைந்த தயிரினையும் சுவைத்துப் பார்த்து வேறுபாடுகளை அறிந்து கொள்வோம்.
 
நொதித்தல்:
 
இட்லி மாவு தயாரித்தல் என்பது மீளா மாற்றத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
ஈஸ்ட் மற்றும் சில வகை பாக்டீரியாக்ககளினால் சர்க்கரைக் கரைசலினை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.
இந்நிகழ்வினில் உண்டான ஆல்கஹாலினை மீண்டும் சர்க்கரையாக மாற்ற இயலாது. எனவே நொதித்தல் என்பது வேதியியல் மாற்றமாகும்.
 
shutterstock1154073754.jpg
இட்லி
 
shutterstock475924600.jpg
ஈஸ்ட்
 
குறிப்பு:
லூயிஸ் பாஸ்டியர்  (1822 - 1895) என்ற பிரெஞ்சு வேதியாளர் மற்றும் நுண்ணுயிரியலாளரும் ஆவார். இவரே முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர். காற்று அற்ற சூழலில் ஈஸ்ட் என்ற நுண்ணுயிரியின் முன்னிலையில் நிகழும் செயல் நொதித்தல் என்று கூறினார். இவரே ரேபிஸ் என்ற வெறி நாய் கடிக்கு மருந்து கண்டறிந்தவர்.
shutterstock_1481924591.jpg
லூயிஸ் பாஸ்டியர்