PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காகிதம், காய்ந்த மரம், தீக்குச்சி போன்றவை எரியும் வேதிவினை பொழுது முற்றிலும் புதிய பொருளான  சாம்பல், வெப்பம், ஒளி மற்றும் புகையை உண்டாகின்றன இந்நிகழ்வு எரிதல் ஆகும்.
காகிதம் எரிதல் வேகமாக நிகழும் ஒரு நிகழ்வு. இது வேதியியல் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். காகிதம் எரியும் பொழுது, அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு, நீர், நீராவி, புகை, சாம்பல் போன்றவை பெறப்படுகிறது. இந்த பொருள்களை இணைத்து மீண்டும் காகிதத்தைப் பெறுதல் இயலாது. எனவே, இது ஒரு நிலையான மாற்றமாகும்.
 
shutterstock57283288.jpg
காகிதம் எரிதல்
  
மெக்னீசியம் நாடாதுண்டு ஒன்றை எரிய வைத்து அந்நிகழ்வு எந்த வகையான மாற்றம் என வகைப்படுத்தலாம்:
 
மெக்னீசியம் நாடாவினை எரிய வைக்கும் போது வெண்ணிற ஒளியில் எரியும், இதை ஒரு கண்ணாடித் தட்டில் நீட்டினால், வெண்ணிற தூளாக சாம்பலைச் சேகரிக்க முடியும்.
 
மெக்னீசியம் + ஆக்ஸிஜன் → மெக்னீசியம் ஆக்சைடு
 
2Mg + O2 2MgO
  
காற்றில் மெக்னீசியம் நாடா எரியும் பொழுது, மெக்னீசியம் நாடா ஆக்ஸிஜனுடன் இணைந்து மெக்னீசியம் ஆக்சைடு என்ற புதிய பொருள் ஒன்று உருவாவதால் இது ஒரு வேதியியல் மாற்றமாகும். மெக்னீசியம் ஆக்சைடு என்ற சேர்மம் வெண்ணிற சாம்பல் தூள் போல் காணப்படுகிறது.
 
6.png
மெக்னீசியம் நாடாதுண்டு