PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயற்பியல் மாற்றம் போலவே, வேதியியல் மாற்றமும் வெப்ப ஏற்பு மாற்றமாகவோ அல்லது வெப்ப உமிழ் மாற்றமாகவோ இருக்கலாம் பின் வரும் செயல்பாடுகளின் மூலம் அறியலாம்.
 
எடுத்துக்காட்டாக சோப்புத் தூளுடன் நீரினைச் சேர்க்கும் பொழுது வெப்பமாகவும், குளுக்கோசுடன் நீரைச் சேர்க்கும் பொழுது குளிர்ச்சியாகவும், மரம் அல்லது காகிதம் மற்றும் மெக்னீசியம் நாடா எரியும் பொழுது வெப்பமும் ஒளியும் வெளியேறுவதை நாம் ஏற்கனவே அறிவோம். இது போன்று வெப்பத்தை வெளியிடும் மாற்றங்களுக்கு வெப்ப உமிழ் மாற்றங்கள் என அழைக்கப்படுகிறது.
  
வெப்ப உமிழ் மாற்றங்கள்:
வேதிவினையின் மூலம் வெப்பத்தை வெளியிடும் அல்லது உமிழும் மாற்றங்களுக்கு வெப்ப உமிழ் மாற்றங்கள் என்றழைக்கப்படும்.
Example:
மரம் அல்லது காகிதம் மற்றும் மெக்னீசியம் நாடா எரியும் பொழுது வெப்பமும் ஒளியும் வெளியேறுகிறது. இது போன்று வெப்பத்தை வெளியிடும் மாற்றங்களுக்கு வெப்ப உமிழ் மாற்றங்கள் என அழைக்கப்படுகிறது.
shutterstock416864710.jpg
மரம் எரிதல்
 
வெப்ப ஏற்பு மாற்றங்கள்:
வேதிவினையின் மூலம் வெப்பத்தை உறிஞ்சும் அல்லது ஏற்கும் மாற்றங்களுக்கு வெப்ப ஏற்பு மாற்றங்கள் என்றழைக்கப்படும்.
Example:
நீர் வெப்பத்தை உறிஞ்சி நீராவியாகிறது அதேபோல் பனிக்கட்டி வெப்பத்தை ஏற்று, உருகி நீராகிறது. இம்மாதிரி வெப்பத்தை உறிஞ்சும் மாற்றங்கள் வெப்ப ஏற்பு மாற்றங்கள் என்றழைக்கப்படும்.
shutterstock163426775.jpg
நீராவி
  
icecubesgcc99b2ff71920w1920.jpg
பனிக்கட்டி உருகுதல்