PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமாற்றம் நிகழும் கால இடைவெளியின் அடிப்படையில், மாற்றங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை,
- கால ஒழுங்கு மாற்றம்
- கால - ஒழுங்கற்ற மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்:
குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்ந்தால், அது கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.
சில கால - ஒழுங்கு மாற்றங்கள்:
i. பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல்.
ii. இதயத்துடிப்பு.
iii. மணிக்கொரு முறை கடிகாரம் அடிக்கும் நிகழ்வு (கடிகாரத்தின் நொடி - முள் / நிமிட - முள் / மணி - முள்ளின் ஓட்டம்).
iv. ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறுவது (மழைக்காலம் முதல் குளிர்காலம் வருவது மற்றும் குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வருவது).
குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வந்தவுடன், நாம் உடுத்தும் உடையின் தன்மையும் மாறுகிறது. குளிர்காலத்தில் கம்பளியிலான ஆடைகளையும், கோடைக்காலத்தில் பருத்தியிலான ஆடைகளையும் அணிகிறோம். ஏனெனில் குளிர்காலம் குளிர்ச்சியாகவும், கோடைக்காலம் வெப்பமாகவும் இருக்கும்.
குளிர்காலத்தில் இரவின் நீளம் கோடைக்காலத்தைவிட அதிகமா இருக்கும். கோடைக்காலத்தில் குளிர் பானங்களையும், குளிர் காலத்தில் சூடான தேநீர், காபி அல்லது பாலினை பருக விரும்புகிறோம். இம்மாற்றங்கள் பருவங்கள் மாறுவதால் ஏற்படும் சீதோஷணத்தைப் பொருத்தது.
பருவ காலங்கள் மாறுவதும் அதை சார்ந்து வானிலை மாற்றங்கள் நிகழ்வது, நிலையான அச்சில் சுழலும் பூமியின் சுழற்சியால் நிகழ்கிறது. இயற்கையில் பருவகால மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.