PDF chapter test TRY NOW

இப்பகுதியில் ஆய்வக வெப்பநிலைமானிப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம். 
 
மருத்துவ வெப்பநிலைமானி இருக்க ஏன் புதியதாக ஆய்வக வெப்பநிலைமானி?
 
ஆய்வக வெப்பநிலைமானி ஆனது, பள்ளி அல்லது பிற ஆய்வகங்களில் அறிவியல் ஆய்வுகளுக்காக வெப்பநிலையினை அளக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகளிலும் ஆய்வக வெப்பநிலைமானி பயன்படுத்தப்படுகிறது.
 
ஆய்வக வெப்பநிலைமானியின் சிறப்பு என்ன ?
 
மருத்துவ வெப்பநிலைமானியைக்காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட வெப்பநிலையினை அளக்க ஆய்வக வெப்பநிலைமானிப் பயன்படுத்தப்படுகிறது.
 
shutterstock1182472768.jpg
ஆய்வக வெப்பநிலைமானி
  • ஆய்வக வெப்பநிலைமானியின் கண்ணாடி தண்டும், குமிழும் மருத்துவ வெப்ப நிலைமானியைக் விட பெரியதாகும். மேலும் இதில் குறுகிய வளைவு காணப்படுவது இல்லை.
  • ஆய்வக வெப்பநிலைமானியானது \(−\)\(10\)\(°\)\(C\) முதல் \(110\)\(°\)\(C\) வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
ஆய்வக வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
  • வெப்பநிலையினை அளவிடும்போது வெப்பநிலைமானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்.
  • எப்பொருளின் வெப்பநிலையினை அளக்கவேண்டுமோ அப்பொருளானது முழுவதும் வெப்பநிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களிலும் சூழ்ந்து உள்ளபோது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும்.
ஆய்வக வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி ஒரு பொருளின் வெப்பநிலை அல்லது சூடான நீரின் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது என்பதை ஒரு செயல்பாட்டைக் கொண்டு அறிந்துக்  கொள்ளப் போகிறோம்.
 
labthermo.jpg
வெப்பநிலையை அளவிடுதல்
  • ஒரு பீக்கரில் பனிக்கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆய்வக வெப்பநிலைமானியினை எடுத்துக்கொண்டு அதன் குமிழானது பனிக்கட்டியில் மூழ்கி இருக்குமாறு வைக்கவேண்டும்.
  • அதனை செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும்.
  • குமிழானது முழுவதும் பனிக்கட்டியில் மூழ்கி இருப்பதனை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
  • குமிழானது பீக்கரின் அடிப்பகுதியினையோ அல்லது சுவர்ப்பகுதியினையோ தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பாதரசம் மேல் ஏறுவதனை உற்றுநோக்க வேண்டும்.
  • அது நிலைத்தன்மையினை அடைந்தவுடன் அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • சூடான நீரினைப் பயன்படுத்தி சோதனையினை திரும்பச் செய்ய வேண்டும்.
இவ்வாறே நாம் ஒரு பொருளின் வெப்பநிலையை ஆய்வக வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி கண்டறியலாம்.