PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில் மருத்துவ வெப்பநிலைமானிக்கும் ஆய்வக வெப்பநிலைமானிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
ஆய்வக வெப்பநிலைமானி:
  • ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக \(-\) \(10\)\(°\)\(C\) முதல் \(110\)\(°\)\(C\) வரை அளவிடப்பட்டிருக்கும்.
  • குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும்.
  • வெப்பநிலைமானியானது வெப்பமூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது. எ.கா. திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள்
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை.
  • இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது.
shutterstock1182472768.jpg
ஆய்வக வெப்பநிலைமானி
 
மருத்துவ வெப்பநிலைமானி:
  • மருத்துவ வெப்பநிலைமானியானது \(35\)\(°\) \(C\) முதல் \(42\)\(°\)\(C\) வரை அல்லது \(94\)\(°\)\(F\) முதல் \(108\)\(°\)\(F\) வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது.
  • பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது. அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது.
  • கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது.
  • பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும்.
  • இது உடல் வெப்பநிலையினை அளக்க பயன்படுகிறது.
shutterstock114040099.jpg
மருத்துவ வெப்பநிலைமானி