PDF chapter test TRY NOW
இப்பகுதியில் வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் அளவீடுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
பொதுவாக வெப்பநிலையை மூன்று முறைகளில் அளவிடலாம் அவைகள் முறையே
- செல்சியஸ் அளவீட்டு முறை
- பாரன்ஹீட் அளவீட்டு முறை
- கெல்வின் அளவீட்டு முறை
- சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ் என்பவரின் பெயரினால் \(1742\) முதல் இந்த அலகீட்டு முறையானது உருவாக்கப்பட்டது.
- அதற்கு முன்பு இந்த அளவீட்டு முறை சென்டிகிரேடு என அழைக்கப்பட்டது.
- இந்த வெப்பநிலைமானியின் அளவுகோலானது நீரின் உறைநிலை வெப்பநிலையினை \(0\) \(°\)\(C\) ஆரம்ப மதிப்பு இருக்கும்.
- நீரின் கொதிநிலை வெப்பநிலையினை \(100\) \(°\)\(C\) இறுதி மதிப்பாக கொண்டு அளவிடப்பட்டு உள்ளது.
- கிரேக்க மொழியில் சென்டம் என்பது \(100\) என்ற மதிப்பினையும் கிரேடஸ் என்பது படிகள் என்பதனையும் குறிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளும் இணைந்து சென்டிகிரேடு என்ற வார்த்தை உருவானது
- மனித உடலின் வெப்பநிலையினை அளக்க பாரன்ஹீட் அளவீட்டு முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
- ஜெர்மன் மருத்துவர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது.
- பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை \(32\) \(°\)\(F\) மற்றும் நீரின் கொதிநிலை \(212\) \(°\)\(F\) என எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- எனவே பாரன்ஹீட் வெப்பநிலைமானியின் அளவுகோலானது \(32\) \(°\)\(F\) லிருந்து \(212\) \(°\)\(F\) வரை அளவிடப்பட்டுள்ளது.
- வில்லியம் லார்டு கெல்வின் என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. இது வெப்பநிலையினை அளக்கக்கூடிய \(SI\) அளவீட்டு முறையாகும்.
- இந்த அலகு முறையானது \(K\) என்ற எழுத்தினால் குறிக்கப்படுகிறது.
- தனிச் சுழி வெப்பநிலையில் இருந்து இதன் அளவீட்டு முறையின் மதிப்புகள் தொடங்குவதால் தனிச்சுழி வெப்பநிலைமானி எனவும் அழைக்கப்படுகிறது.
- செல்சியஸ் அலகு முறையில் உள்ள வெப்பநிலையின் மதிப்பினை பாரன்ஹீட் அலகு முறைக்கும் கெல்வின் அலகு முறைக்கும் சுலபமாக மாற்ற இயலும்.