PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரும்பு உருகுதல், நிலக்கரி எரிதல் மற்றும் மெழுகுவத்தியின் சுடர் ஆகியவற்றில் பொதுவானவை செயல் என்ன என்று சிந்திக்க முடியுமா ?
இவை அனைத்தும் எரிதல் எனப்படும்.
எரிதல்
எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்.
‘எரிதல்’ என்பது எரியும் வேதிவினைதானா?
எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது.
எரிதல் வினை
ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன.
\(CH_4\) \(+\) \(2\) \(O_2\) \(→\) \(CO_2\) \(+\) \(2\)\(H_2\) \(O\) \(+\) \(\text{வெப்ப ஆற்றல்}\)
அனைத்து எரிதல் வினையின் போது, வெப்பம் வெளியிடப்படுவதால், இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.
எரி வெப்பநிலை:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை , அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.
மாசுபாடு
Example:
மத்தாப்பு எரிதல், ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது, எரியாது, வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு எரி வெப்பநிலைகளைக் கொண்டுள்ளன.
எரி பொருள்கள் என்றால் என்ன ?
மிகக் குறைந்த எரி வெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை ஆகும். எனவே, இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நிகழ்வு தீப்பிடித்தலின் வேதிவினை:
\(\text{ஆக்ஸிஜன்}\) \(+\) \(\text{வெப்பம்}\) \(+\) \(\text{எரிபொருள்}\) \(=\) \(\text{தீ}\)
Example:
பெட்ரோல், ஆல்கஹால், எல்.பி.ஜி (திரவ பெட்ரோலிய வாயு), சி.என்.ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு).