PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நம் வயிற்றில் எரிச்சல் என்று மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவர் நம்மிடம் கால தமதமாக உணவு உட்கொண்டால் அது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்து என்று கூறுவார்கள்.
  
நீங்கள் முதலில் அமிலத்தன்மை என்றால் என்ன என்று சிந்தித்தது உண்டா ?
அமிலத்தன்மை என்பது, இரைப்பையில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் பெயர் என்ன ? அந்த அமிலத்தின் பயன் என்ன? என்பனவற்றை விரிவாக காண்போம்.
 
YCIND_220603_3708_4.png
இரைப்பை
 
நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் \((HCl)\) அமிலத்தைச் சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது.
  
இரைப்பை நீர் எப்பொழுதும் ஒரே அளவு சுரக்குமா? இல்லை
 
அமில தன்மை உள்ள உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
 
இந்த அமிலத்திற்கு என்று ஏதாவது அளவு உண்டா? இரைப்பையில் உள்ள செல்கள் எந்த அளவு வரை அமிலத்தை தாங்கும் தன்மைக் கொண்டது ? 
 
அமிலத்தன்மை காரணமாக, அதிகப்படியான அமிலம் வயிற்றுப்பகுதியிலிருந்து நம் உணவுக்குழாய் வரை செல்லும். மேலும், நமது வயிற்றுப் புறணிச் செல்கள் \(1\) முதல் \(3\) வரையிலான \(pH\) கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
அமிலத்தன்மையை போக்க ஏதாவது மருந்து உண்டா? உண்டு.
  
  shutterstock118613731.png
அமில நீக்கி
  
நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும் போது, எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் அல்லது அமில நீக்கி என்று பெயா். இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்.
 
ஓர் அமிலத்துடன் சரியான அளவு காரத்தைச் சேர்க்கும்போது, அது நடுநிலைமையடைகின்றது என்பதை நாம் வேதியிலில் படித்துள்ளோம். அதே போல ஆண்டாசிட் அல்லது அமில நீக்கி மருந்துகளை உட்கொள்ளும் போது, வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மை வாய்ந்ததாக மாறுகின்றன.
 
அமிலத் தன்மையை நீக்கும் தன்னைக் கொண்ட இவைகளுக்கு என்ன பெயர்? அமில நீக்கிகள் என்று பெயர்.
   
Capture1w826.jpg
அமில நீக்கிகள்
 
பொதுவாக சோடியம் பை கார்பனேட் \((NaHCO_3)\), கால்சியம் கார்பனேட் \((CaCO_3)\), மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு \((Mg(OH)_2)\), மெக்னீசியம் கார்பனேட் \((MgCO_3)\) மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு \(Al(OH)_3\) ஆகியவை அமில நீக்கிகள் ஆகும்.
Example:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கும் பொழுது ஏற்படும் வினை அமில நீக்க வினை ஆகும்.
 
\(MgOH_2(s) + 2HCl \to MgCl_2 + 2H_2O\)