PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காலரா நோயை குணப்படுத்தும் இந்த வாய்வழி நீரேற்று கரைசல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
வாய்வழி நீரேற்று கரைசல்  (Oral Rehydration Solution) என்பது உப்புசர்க்கரை மற்றும் நீர்  ஆகியவற்றின் கலவை ஆகும்.
நாம் எப்பொழுது, இந்த வாய் வழி நீரேற்று கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும்?
 
நாம் வாய் வழி நீரேற்று கரைசல் (Oral Rehydration Solution) உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையைச் சரி செய்ய உதவுகிறது.
 
இந்த வாய் வழி நீரேற்று கரைசல் (Oral Rehydration Solution) நமது உடலில் எவ்வாறு செயல்படுகிறது?
 
இது உடலில் நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுத்து, நீர்ச் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
 
வயிற்றுப் போக்கின் போது மட்டும் ஏன்? அதிகப்படியான நீரை நம் உடல் இழக்கிறது?
 
வயிற்றுப் போக்கின் போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில், நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனால், வழக்கமானதை விட ஒரு நாளைக்குப் பல லிட்டா் நீா் இழப்பு ஏற்படுகின்றது.
 
shutterstock1136250125.jpg
வாய்வழி நீரேற்று கரைசல் (Oral Rehydration Solution)
 
அதோடு மட்டும் இல்லாமல் நீரோடு சேர்ந்து சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
 
சோடியம் நமது உடலுக்கு அவ்வளவு அத்தியாவசியமா?
 
ஆம். நமது உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் \((Na)\) போன்ற தாது உப்பு தேவைப்படுகின்றது. பொட்டாசியம் தாது இருந்தால் தான் உடலில் தசைகள் நன்கு சுருங்கி விரிவடையும். நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால் தான், நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்.
Example:
குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
YCIND_220603_3708_2.png
பொட்டாசியத்தை செல்கள் ஏற்றுக் கொள்ளுதல்
 
செயற்கையான உப்பு நீர்க்கரைசல் மட்டும் எப்படி உடனடியாக வேலை செய்கிறது?
 
இந்திய மருத்துவரான டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் என்பவர், செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும் போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றது என்றும்,  உப்பு நீர்க்கரைசலை வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது என்றும் கண்டறிந்தார். மேலும், குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதையும் கண்டறிந்தார்.
 
சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடலின் செல்களின் உள்ளே செல்கின்றது. இதனால், வயிற்றுப் போக்கின் போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் உப்பு மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
 
YCIND_220603_3708_3.png
வயிற்றுப்போக்கிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பு
 
வயிற்றுப் போக்கிற்கு எந்தக் காரணமாக இருந்தாலும், சரி \(90\)\(%\) முதல் \(95\)\(%\) நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை ஆகும். இழந்த நீரை நமது உடல் மீண்டும் அடைந்து சமநிலை பெறுவதின் மூலம், பெரும்பாலான நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள். சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன. இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும் தன்மையை துரிதப்படுத்துகிறது.
 
இந்தச் செயல்பாடானது, இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.