PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீங்கள் உங்கள் உடலின் வெப்பநிலையை எப்பொழுதாவது கணக்கிட்டது உண்டா?
 
shutterstock_2043145466.jpg
வெப்பநிலை
 
சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது \(98.4\) முதல் \(98.6\) டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வெப்பமானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
 
காய்ச்சல் வருவதற்கு காரணம் தான் என்ன?
 
காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்று ஆகும். 
 
ஏன் காய்ச்சலின் போது  நமது உடல் அதிக வெப்பநிலை அடைகிறது?
 
நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே, படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்திறது.
 
நோய் எதிர்ப்பு சக்தியானது உடலின் வெப்பநிலையை மட்டும் தான் உயர்த்துமா? 
 
நமக்கு நோய்தொற்று ஏற்பட்ட உடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதாலமஸை சென்றடைகின்றன. ஹைப்போதாலமஸின் பணி நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதாகும். பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்த உடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது. இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது.
 
shutterstock_1196575783.jpg
தெர்மோமீட்டர்
 
பொதுவாக குறைந்தளவு காய்ச்சல் நமக்கு நல்லது, ஏனெனில் இவை நோய்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கிறது. இருப்பினும் உடல் வெப்பநிலை \(105\) \(\text{டிகிரி பாரன்ஹீட்டை}\) விட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தை கூட உண்டாக்கும்.
ஆன்டிபைரடிக்ஸ் அல்லது உடல் வெப்பம் தனிப்பி என்பது, காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும். (Anti - against and Pyretic -Feverish) இவை, புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
shutterstock_502942840 (1).jpg
பாரசிட்டமால்
 
பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு தெரிந்த ஒரு  அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.