PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காயங்களுக்கு மருந்திடும் வலைத்துணிகளையும் பேண்டேஜ் துணிகளையும் பார்த்திருப்பீர்கள். அவை இயற்கை இழையா? அல்லது செயற்கை இழையா?
 
ரேயான் என்பது ஓர் பகுதியான செயற்கை இழை.
 
shutterstock_680123797.jpg
பேண்டேஜ் துணிகள்
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரேயான் கண்டுபிடிக்கப்பட்டது. \(1946\)-இல் இந்தியாவில் முதல் ரேயான் தொழிற்சாலை கேரளாவில் நிறுவப்பட்டது.
  
ஏன் ரேயான் ஓர் பகுதி செயற்கை இழை என்றழைக்கப்படுகிறது?
 
மனிதனால் தயாரிக்கப்பட்ட இழையாயினும் இவை மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் தயாரிக்கப்படுகிறது.
 
ரேயான் தயாரிக்கும் முறை:
 
மரக்கூழ் கொண்டு ரேயான் பின்வரும் படிநிலைகளில் தயாரிக்கப்படுகிறது.
 
1666328534361.jpg
ரேயான் தயாரித்தல்
  • மரம் அல்லது மூங்கிலின் கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசை பல வேதிப்பொருள்களைச் சேர்த்து திடப்படுத்தினர்.
  • முதலாவதாக, கூழுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்க்கப்பட்டு பின்னர் கார்பன்-டை- சல்பைடு சேர்க்கப்படுகிறது. சேர்க்கப்பட்ட வேதிப்பொருள்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
  • திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரெட்டின் (பக்க நுண்ணிய துளைகள் கொண்ட உலோகத்தட்டுகள் பொருந்திய ஒரு சாதனம்) வழியே அழுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும் பொழுது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன.
  • அந்த இழைகளினை கோப்பினால் சுத்தம் செய்து, உலர வைத்துப் பெறும் புதிய இழைகளுக்கு ரேயான் என்று பெயர்.
மரக்கூழ் மட்டுமின்றி பருத்தி கொட்டைகளிலிருந்தும் ரேயான் தயாரிக்கப்படுகிறது.
 
ரேயான் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்:
  
shutterstock1879775707w300jpg.jpg
ரேயான் துணி
  • பட்டினை விட மலிவாகவும் பட்டை போன்றும் பல வகை சாயங்கள் கொண்டு நிறமேற்றி ரேயான் இழை உருவாக்கப்படுகிறது.
  • ரேயான் பருத்தியுடன் கலந்து போர்வையாக பயன்படுகிறது.
  • ரேயான் கம்பளியுன் கலந்து விரிப்பாகவும் பயன்படுகிறது.
  • சுகாதாரப் பொருள்களான டயபர்கள், காயங்களுக்கு மருந்திடும் வலைத்துணிகள் மற்றும் பேண்டேஜ் துணிகளாகவும் பயன்படுகிறது.
நைலான்:
  
shutterstock_1722333400.jpg
பாரசூட்டுகள் 
  
பாரசூட்டுகள் மற்றும் மலை ஏறுவதற்கு பயன்படும் கயிறு மிக வலிமையானதாக இருக்க வேண்டும். அத்தகைய வலிமையை கொண்டதுதான் நைலான். அதனால் தான் அவை அங்கு பயன்படுத்தப்படுகிறது.
நைலான் முதல் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை ஆகும்.
 
நைலான் தயாரிக்கும் முறை:
  • நைலான் என்ற பலபடி இழையானது பாலி அமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது.
  • ஹெக்ஸா மெத்திலீன்-டை-அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள்.
  • திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி, வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது நைலான் உருவாகிறது.
நைலான் இழையின் பண்புகள்:
  • வலுவானது.
  • நீட்சித்தன்மை உடையது.
  • எடை குறைவானது.
  • பளபளக்கும் தன்மை உடையது.
  • தோய்ப்பதற்கு எளிதானது.
  • மிருதுவானது மற்றும் நீண்ட நாட்கள் உழைக்க கூடியது.
மேற்கண்ட பண்புகளை கொண்டதால் நைலான் ஆடை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நைலான் மிக வலுவானதால் அவை இரண்டாம் உலகப்போரின் பொழுது பாரசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களை தாயரிக்க பயன்படுத்தப்பட்டது.
 
நைலான் இழையின் பயன்கள்:
 
shutterstock1048575749w300jpg.jpg
நைலான் கயிறு
  • காலுறைகள் தாயரிக்க பயன்படுகிறது.
  • கயிறுகள் தாயரிக்க பயன்படுகிறது.
  • கூடாரங்கள் தாயரிக்க பயன்படுகிறது.
  • பல் துலக்கிகள் தாயரிக்க பயன்படுகிறது.
  • கார்களில் இருக்கையின் பட்டைகள் தாயரிக்க பயன்படுகிறது.
  • தலையணை போன்ற பைகள் தாயரிக்க பயன்படுகிறது.
  • திரைச்சீலைகள் தாயரிக்க பயன்படுகிறது.