PDF chapter test TRY NOW

செயற்கை இழைகள்:
பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் இழைகளுக்குச் செயற்கை இழைகள் என்று பெயர்.
Example:
பாலியெஸ்டர், அக்ரிலிக் மற்றும் நைலான்.
பாலியெஸ்டர்:
  
shutterstock1166586199w300jpg.jpg
பாலியெஸ்டர் இழை
 
பாலிகாட், பாலிவுல் மற்றும் டெரிகாட் போன்ற பல பெயர்களால் பாலியெஸ்டர் விற்பனை செய்யப்படுகிறது. அவை பின்வருவனற்றின் கலவைகளாகும்.
  • பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை.
  • பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.
  • டெரிகாட் என்பது டெரிலீன் என்ற பாலியெஸ்டர் வகையை சார்ந்த இழை மற்றும் பருத்தியின் கலவை.
பாலி எத்திலீன் டெரிப்தாலேட் (PET):
  
bottles604661280w300jpg.jpg
PET பாட்டில்கள்
  
பாலி எத்திலீன் டெரிப்தாலேட் ஆடைகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை, தோய்ப்பதற்கும் எளிதானது.
 
மேலும் இந்த இழை கொண்டு நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் மற்றும் சில பொருட்களை தயாரிக்கலாம்.
  
 அக்ரிலிக்:
 
shutterstock145883840w300jpg.jpg
அக்ரிலிக் துணி
இதுவும் முற்றிலும் செயற்கை இழை நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துணைப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்த இழைகளை கொண்டு ஸ்வட்டர்கள், சால்வைகள் மற்றும் போர்வைகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
 
shutterstock247469317w300jpg.jpg
அக்ரிலிக் இழை ஸ்வட்டர்
 
இவை இயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட கம்பளியை காட்டிலும் விலை மலிவானவை, பல வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும் நீடித்து உழைப்பதால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
 
செயற்கை இழைகளின் சிறப்புகள்:
  • செயற்கை இழை ஆடைகள் சுருங்குவதில்லை.
  •  ஆடைகளின் நிறம்  விரைவில் மங்குவதில்லை.
  • வலிமையானது.
  • நீட்சித்தன்மை கொண்டது.
செயற்கை இழைகள் வலிமையாக இருப்பதால் மீன்பிடி வலைகள் தயாரிக்க பயன்படுகிறது.
டிராம்போலைன் என்ற செயற்கை இழை வலிமையாகவும் நீட்சித்தன்மை கொண்டதாகவும் உள்ளதால் அதன் மீது குதிப்பதையும் தாங்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
செயற்கை இழைகளின் குறைபாடுகள்:
  • செயற்கை இழை ஆடைகள் வெப்பத்தை தாங்கும் திறனற்றவை.
  • எளிதில் தீப்பற்றக்கூடியவை.
  • குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன.
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • நீண்ட நாட்கள் உழைப்பதால் நுண்ணிய நெகிழி துகள்கள் தோய்ப்பதன் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து சுற்றுப்புற மாசுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
செயற்கை இழையின் நன்மைகள்:
  
சமையலறை மற்றும் ஆய்வகங்களில் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை தவிர்த்து பருத்தியால் ஆன ஆடைககளை அணிவதன் மூலம் விபத்துகளை குறைக்கலாம், கோடை காலங்களிலும் பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் நல்ல காற்றோட்டத்தை பெறலாம். செயற்கை இழையால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம்.