PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நம்மை சுற்றியுள்ள பொருட்களில் பெரும்பாலனவை நெகிழியால் ஆனவையே. முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட மரம், உலோகம் மற்றும் கண்ணாடியால் ஆன பொருள்களை இன்று நெகிழி பதிலீடு செய்து விட்டது.
 
shutterstock1304161078w300.jpg
நெகிழி பொருட்கள்
  
நெகிழி:
Answer:
நெகிழி பலபடி பொருட்களால் ஆனவை.
நெகிழி என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.
Important!
 "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.
எட்மன்ட் அலெக்சாண்டர்  என்பவர் பார்க்கிசீன் என்ற முதல் நெகிழியினை உருவாக்கியவர்.
 
நெகிழியின் பயன்கள்: 
 
தொழில்நுட்பம், கட்டுமானம் சுகாதாரபராமரிப்பு, போக்குவரத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நெகிழியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கீழ்கண்ட காரணங்களால் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • குறைந்த எடை
  • அதிக வலிமை
  • சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை
  • இளகும் தன்மை கொண்டது
  • நீரினை உட்புகவிடாதது
  • புற ஊதாக் கதிர்களை உட்புகவிடாதது
  • விலை மலிவானது
  • கையாள ஏதுவானது
மனித வாழ்வில் நெகிழியின் பங்கு:
  
ஒரு பொருளை பயன்படுத்துவோரை கொண்டே அந்த பொருளின் பயன்பாடு இருக்கும். அதை போலவே நெகிழியை நன்மை தரும் விதத்திலும் தீமையை தரும் விதத்திலும் பயன்படுத்த முடியும். மனிதர்களாகிய நம்மிடமே உள்ளது நெகிழியின் பயன்பாடு.
 
shutterstock1007548057w300.jpg
நெகிழி உறிஞ்சுக்குழாய்கள்
 
பாலிபுரோபைலீன் என்ற நெகிழியினால் செய்யப்பட்ட உறிஞ்சுக்குழாயினை நோய்த்தொற்றுநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லை. எனவே இவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவும் அபாயத்தை தடுக்கிறது.
  
cover.jpg
பாலித்தீன் பை
 
பாலித்தீன் என்ற பைகளை நாம் குறைந்த காலத்திற்கு பயன்படுத்திவிட்டு குப்பையாக நிலத்தில் வீசுகிறோம். அவை நீண்ட நாட்கள் மக்காமல் நிலத்தின் தன்மையை கெடுத்து நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இவை மனித குலத்திற்கு தீங்கானது.
 
தமிழக அரசும் நெகிழியின்  பயன்பாட்டினை பொறுத்து சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதற்கு சான்றாக தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழி பொருட்கள் என்ற தலைப்பில் அரசாணை வெளியிட்டுள்ளது.
\(1\) ஜனவரி முதல் நெகிழி தடை தமிழகம் முழுவதும் அமுலுக்கு வந்தது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அரசாணை  T.N.G.O.NO:\(84\), தேதி \(25/06/2018\).