LEARNATHON
III

Competition for grade 6 to 10 students! Learn, solve tests and earn prizes!

Learn more

Theory:

மின்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்களின் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் மின்கடத்தி வழியாக செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டத்தின் எண் மதிப்பாகும்.
 

மின்னோட்டத்தின் சூத்திரம் பின்வருமாறு:

 

\(\text{மின்னோட்டம்}\) \(=\) \(\frac{\text{மின்னூட்டத்தின் அளவு }}{\text{காலம்}}\)

 

\(I = Q/t\)

 

[\(I\) - மின்னோட்டம், \(Q\) - மின்னூட்டம், \(t\) - காலம்]

 

கூலூம்’ என்பது மின்னூட்டத்தின் அலகு. அதன் குறியீடு ‘\(C\)’

ஒரு மின்கடத்தியின் வழியாக ஒரு வினாடியில் ஒரு கூலம் மின்னூட்டம் பாய்ந்தால் அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் எனலாம்.

மின்னோட்டத்தை அளக்கும் கருவி:

 

அம்மீட்டர் என்பது மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவியாகும்.

 

136910945444f0b389176b.jpg
அம்மீட்டர்

 

செயல்பாடு:

 

ஒரு மின்கலம், ஒரு அம்மீட்டர் மற்றும் மின்விளக்கு ஆகியவற்றைக் கொண்டு எளிய மின் தொடரை உருவாக்கவும். மின் தொடரில் பாயும் மின்னோட்டத்தை அம்மீட்டர் மூலம் அளவிடவும்.

 

13691080074ba71abaf5db (1).jpg

 

கணக்கீடு:

 

\(15\) விநாடிகளுக்கு ஒரு மின்சுற்று வழியாக \(3\) கூலம் மின்னூட்டம் பாயும் போது, ​​அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவு என்னவாக இருக்கும்?

 

மின்னூட்டம், \(Q = 3 C\)

 

நேரம், \(t = 15 s\)

 

\(I = Q/t = 3/15 = 0.2 A\)

 

எனில், மின்சுற்று வழியாக பாயும் மின்னோட்டம் \(0.2\) ஆம்பியர்.