PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நுண்ணியிர்க்கொல்லி
 
பெனிசிலின், செபலோஸ்போரின்  போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.
Example:
பெனிசிலியம் நொட்டேட்டம்
'பெனிசிலின்' மருந்துகளின் அரசி என்று கூறப்படுகிறது. இதை சர் அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் \(1928\)ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 
 
PPT4.png
பெனிசிலியம்

வைட்டமின்கள்
 
ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ  போன்ற பூஞ்சைகள் வைட்டமின் B2 (Riboflavin) வை உருவாக்கப் பயன்படுகின்றன.
 
உணவு
 
காளான்கள் அதிக அளவு புரதத்தையும் தாதுப் பொருள்களையும் கொண்டுள்ளன. உண்ணக்கூடிய பொதுவான காளான் அகாரிகஸ்  வகையைச் சார்ந்தது ஆகும்.
 
Agaricushondensis71317.jpg
அகாரிகஸ்
 
மதுபானம்
 
ஈஸ்ட் போன்ற சில பூஞ்சைகள் இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளன. அவை சர்க்கரைக் கழிவை நொதிக்கச்  செய்து எத்தனாலாக மாற்றுகின்றன.
 
shutterstock1116181814.jpg
ஈஸ்ட்
பூஞ்சைகளால் ஏற்படும் தீமைகள்
மனிதர்கள்
 
பூஞ்சையின் பெயா்
நோயின் பெயா்
டிரைகோஃபைட்டான் இனம்உருளைப் புழுக்கள் (வட்ட வடிவமான தடிப்புகள் தோலில் தோன்றுகின்றன)
மைக்காஸ்போரம் ஃபா்ஃபா்பொடுகு
டீனியா பெடிஸ்கால் பாதத்தில் ஏற்படும் நோய்
 
தாவரங்கள்
 
நோயுயிரி
நோயின் பெயா்
ஃபயூசரியம் ஆக்சிஸ்போரம்பருத்தியில் வாடல் நோய்
சொ்க்கோஸ்போரா பொ்சொனேட்டாவோ்க்கடலையில் டிக்கா நோய்
கோலிடோட்ரைக்கம் ஃபல்கேட்டம்கரும்பில் சிவப்பு அழுகல் நோய்
பைரிகுலரியா ஒரைசேநெல்லில் பிளாஸ்ட் நோய்
அல்புகோ கேண்டிலாமுள்ளங்கியில் வெண்துரு நோய்
பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு  இடையே உள்ள வேறுபாடுகள்
பாசிகள்
பூஞ்சைகள்
பாசிகள் தற்சாா்பு ஊட்ட உயிரிகளாகும்.பூஞ்சைகள் பிற சாா்பு ஊட்ட உயிரிகளாகும்.
இவை நிறமிகளைக் கொண்டுள்ளன.இவை நிறமிகள் அற்றவை.
சேமிப்பு உணவுப் பொருள் ஸ்டாா்ச் ஆகும்.சேமிப்பு உணவுப் பொருள்கள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் ஆகும்.
சில பாசிகள் புரோகரியாட்டிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளன.
எ.கா. சயனோபாக்டீரியா (நாஸ்டாக், அனஃபீனா)
அனைத்தும் யூகரியாட்டிக் செல் அமைப்பைக் கொண்டுள்ளன.
எ.கா. அகாரிகஸ்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1f/Agaricus_hondensis_71317.jpg