PDF chapter test TRY NOW

எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு
செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரு வகையாகப் பிரிக்கலாம்.
 
Design - YC IND (3).png
ஒரு செல் மற்றும் பல செல் உயிரினங்களின் செல்லின் அமைப்பு
 
ஒரு செல் உயிரிகள் - இவற்றின் உடல் ஒரு செல்லால் மட்டுமே உருவானது.
Example:
பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவாக்கள்

பல செல் உயிரிகள்  - இவைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் உருவானவை.

Example:
பூஞ்சைகள், முதுகெலும்பிகள், பறவைகள், ஊர்வன
உட்கரு அடிப்படையில் வகைப்பாடு

உட்கரு, செல்லின் மூளை என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செல்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

 

Design - YC IND (7).png

புரோகேரியாட்டு மற்றும் யூகேரியாட்டு உயிரினங்கள்

 

புரோகேரியாட்டுகள் - ஒழுங்கற்ற உட்கரு கொண்டவை, மேலும் இவற்றின் நுண்ணுறுப்புகள் செல் சுவரினால் சூழப்பட்டிருப்பதில்லை.

Example:
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பல

யூகேரியாட்டுகள் - ஒழுங்கான உட்கரு கொண்டவை. இவற்றின் நுண்ணுறுப்புகள் செல் சுவரினால் சூழப்பட்டு உள்ளன.

Example:
மனிதர்கள், பறவைகள்
Important!
கருமுட்டை முதல் குழந்தை வரை
 
அனைத்து உயிரினங்களும், ஒரு செல்லான ஸ்டெம் செல்லில் இருந்து உருவாகிறது. இச்செல், பிறகு பலமுறை பிரிந்து, உயிரினமாக வளர்கிறது.
 
Design - YC IND (28).png
கரு வளருதல்
ஸ்டெம் செல்கள்

ஸ்டெம் செல்கள் உருமாற்றம் அடையாத செல்கள் எனப்படும். உயிரினங்களின் உடலானது, கருமுட்டை (சைகோட்) எனும் ஒற்றைச் செல்லிருந்து உருவாகிறது.  மேலும், மைட்டாசிஸ் பிரிதல் மூலம், இந்த செல்லானது பல விதமான செல்களாகப் பிரிகிறது. இதற்கு, மறுபாடடைதல் எனப்படும். 


Design - YC IND.png
ஸ்டெம் செல் மற்றும் அதன் மாறுபாடுகள்