PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான வேதிவினைகளின் தொகுப்பு, வளர்சிதை மாற்றம் ஆகும்.
 
Design - YC IND (34).png
வளர்சிதை மாற்றம்
வேதி வினைகளின் மூலமாக, உணவு பொருளானது  சிறு சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, செல்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கழிவுப் பொருளாக வெளியேறுவது, வளர்சிதை மாற்றம் எனப்படும்.
வளர்சிதை மாற்றம் இரு வழிகளில் நடைபெறுகிறது. 
 
1. வளர் மாற்றம் (Anabolism)
வளர்மாற்றம் என்பது, எளிய மூலக்கூறுகள் இணைந்து, பெரிய மூலக்ககூறாக மாற்றப்படுவது ஆகும்.
Example:
குளுக்கோஸ் \(\rightarrow\) கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்
அமினோ அமிலங்கள் \(\rightarrow\) நொதிகள் மற்றும் ஹார்மோன்கள், புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள் \(\rightarrow\) கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
2. சிதை மாற்றம் (Catabolism)
ஒரு பெரிய மூலக்ககூறு, பல சிறிய மூலக்கூறுகலாக பிரிவது, சிதை மாற்றம் எனப்படும்.
Example:
கார்போஹைட்ரேட் \(\rightarrow\) குளுக்கோஸ்
குளுக்கோஸ் \(\rightarrow\) கார்பன் டைஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றல்
புரதம் \(\rightarrow\)  அமினோ அமிலம்
Design - YC IND (15).png
வளர்சிதை மாற்றம்