PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playமழைக்காலத்தில் இரும்பு மேசை மற்றும் நாற்காலியில் என்ன நடைபெறுகிறது? அவை ஏன் செம்பழுப்பு நிறமாக மாறுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்று இங்கு விரிவாக தெரிந்துகொள்வோம்.

துருப்பிடித்தல்
துருப்பிடித்தல்
இரும்பு பொருட்கள் நீர் மற்றும் ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து நீரேறிய இரும்பு ஆக்ஸைடாக மாறும் வேதிவினையே துருப்பிடித்தல் ஆகும்.
உலோக பொருள்கள் நிறம் மங்குதல்
பளபளப்பான உலோக பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் நடக்கும் வேதிவினையினால் பளபளப்பினை இழக்கின்றன, வெள்ளி பொருள்கள் காற்றுடன் சேர்ந்து கருமை நிறம் அடைகின்றன.

வெள்ளி துருப்பிடித்தல்
இதே போல தாமிரத்தின் பகுதிப்பொருளாக உள்ள பித்தளை, காற்றுடன் சேரும் போது பச்சை நிறப் படலத்தை உருவாக்குகின்றது. தாமிரமும் ஈரக்காற்றும் வேதிவினைக்கு உட்பட்டு காரத்தன்மை கொண்ட தாமிரா கார்பனேட் மற்றும் தாமிரா ஹைட்ராக்சைடு உருவாகிறது.
வெப்பம் உருவாதல்
குளிர்காலத்தில் உடலை சூடாக
வைத்திருக்க உள்ளங்கைகளைத்
தேய்த்திருக்கிறாயா? மிதிவண்டிக்கு காற்றடித்த
பின்பு காற்றடிக்கும் பம்பு சூடாக மாறுவதை
கவனித்திருக்கிறாயா?
இதுபோல,
வேதி வினைகள்கூட வெப்ப ஆற்றலை உருவாக்குகின்றன, இவ்வினைகள் வெப்ப உமிழ்வினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, சுட்ட
சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்சைடு) நீரைச்
சேர்க்கும்பொழுது அதிகளவு வெப்பம் உண்டாகி
நீற்றுச் சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) உருவாகின்றது.

வெப்பம் உருவாதல்
செயல்பாடு
இரு சோதனை குழாய்களில், ஒன்றில் சல்பியூரிக் அமிலம் மற்றும் ஒன்றில் சோடியம் ஹைட்ராக்ஸைடு எடுத்து, மெதுவாக சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலை சல்பியூரிக் அமிலம் உள்ள குழாயில் கவனமாக சேர்க்கவும்.
விளைவு
சோதனை குழாய் பக்கவாட்டில் தொடும் போது சூடாக இருப்பதை உணர முடியும், எனவே இந்த வேதிவினை வெப்ப உமிழ்வினை ஆகும்.