PDF chapter test TRY NOW

வளைவு ஆடியின் பயன்கள்:
 
குழி ஆடிகள்:
  • குழி ஆடிகள் பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் ஒப்பனைக் கண்ணாடியாகவும், முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
90-1.jpg
  • குழி ஆடிகள் ஒளியை நீண்ட தூரத்திற்குப் பரவச் செய்வதால் டார்ச் விளக்குகள், தேடும் விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பயன்படுகின்றன.
90-2.jpg
  • குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து ஒளியினைச் சேகரித்து, ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே, இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
  • நிழலை ஏற்படுத்தாமல் உறுப்புகளைத் தெளிவாகக் காட்டுவதால், கண், காது, மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியினைச் சோதித்துப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் குழி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
90-4.jpg
  • குழி ஆடிகள் எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் பயன்படுகின்றன.
90-5.jpg
 
குவி ஆடிகள்:
  • குவி ஆடிகள் வாகனங்களில் பின் காட்சி ஆடிகளாகப் பயன்படுகின்றன. இவை வெளிப்புறம் வளைந்திருப்பதால் நேரான பிம்பம் மற்றும் அகன்ற பார்வைப் புலத்தைத் தருகின்றன.
90-6.jpg
  • இவை மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் பயன்படுகின்றன. பெரும்பாலும் குறுகிய வளைவுகள் கொண்ட கட்டடத்தின் சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
90-7.jpg
  • சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
90-8.jpg
Reference:
https://www.flickr.com/photos/danielfoster/28103245915/
https://pixabay.com/photos/headlamp-accident-auto-blue-broken-2940/
https://pxhere.com/en/photo/1495099
https://commons.wikimedia.org/wiki/File:VM_5347_G209_north_of_Muyu_-_mirror_at_a_hairpin_bend.jpg