PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பரவளைய ஆடிகள்:
பரவளைய ஆடி என்பது ஒரு வகையான வளைவு ஆடியாகும். இது பரவளையத்தைப் போன்ற வடிவத்தை உடையதாகும். இது குழிந்த எதிரொளிக்கும் பரப்பினைக் கொண்டிருக்கும். அதன் மீது விழும் ஒளிக்கற்றை முழுவதையும் இந்தப் பரப்பானது குவியப் புள்ளியில் குவிக்கின்றது.
 
60-1.jpg
பரவளைய எதிரொளிப்பான்
 
இதேபோல், ஆடியின் குவியப் புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒளிமூலம் ஒன்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகள், இப்பரப்பின் மீது பட்டு, பரவளைய ஆடியின் முதன்மை அச்சிற்கு இணையான திசையில் விரிந்து செல்கின்றன. எனவே, இக்கதிர்கள் பொலிவு குறையாமல் மிக நீண்ட தொலைவிற்குப் பயணிக்கக் கூடியவை.
 
பரவளைய ஆடிகளானவை பரவளைய எதிரொளிப்பான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஒளி ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒலி ஆற்றல் மற்றும் ரேடியோ அலைகள் போன்றவற்றை சேகரிக்க அல்லது வீழ்த்தப் பயன்படுகின்றன. எதிரொளிக்கும் தொலைநோக்கிகள், ரேடியோ தொலைநோக்கிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகளிலும் இவை பயன்படுகின்றன. மேலும், இவை சூரிய சமையற்கலன்கள் மற்றும் சூரிய வெப்பச் சூடேற்றி ஆகியவற்றிலும் பயன்படுகின்றன.
 
Important!
உங்களுக்கு தெரியுமா?
 
பரவளைய ஆடிகள் வேலை செய்யும் தத்துவமானது கிரேக்க - உரோமானியர் காலத்திலிருந்தே அறியப்பட்டிருந்தது. கணித வல்லுநர் டையோகிள்ஸ் எழுதிய ‘எரிக்கும் ஆடிகள்’ என்ற நூலில் இதன் வடிவம் பற்றிய தகவல் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது. இபின் ஷால் என்ற இயற்பியலாளர் \(10\) ஆம் நூற்றாண்டில் பரவளைய ஆடிகளைப் பற்றி ஆராய்ந்தார். ஜெர்மன் இயற்பியலாளர் ஹென்றி ஹெர்ட்ஸ் என்பவர் முதலாவது பரவளைய ஆடியை \(1888\) ஆம் ஆண்டு எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் வடிவமைத்தார்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Sony_parabolic_reflector.jpg