PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சமதள ஆடிகள் ஏற்படுத்தும் விளைவை அனைத்துப் பொருட்களும் ஏற்படுத்த முடியாது. ஒளியானது பளபளப்பான, மென்மையான ஒளிரும் மேற்பரப்பின் மீது படும் போது, அது திருப்பி அனுப்பப்படுகிறது.
ஓர் ஒளிக்கதிரானது பளபளப்பான, மென்மையான, ஒளிரும் பரப்பில் பட்டுத் திரும்பும் நிகழ்வே ஒளி எதிரொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.
ஒளி எதிரொளித்தலில் இரு கதிர்கள் ஈடுபடுகின்றன. அவை,
  • படுகதிர் மற்றும்
  • எதிரொளிப்புக்கதிர்
1.png
எதிரொளிப்பு விதிகள்
  
படுகதிர்:
 
படுகதிர் என்பது ஒரு ஊடகத்திலுள்ள பளபளப்பான எதிரொளிக்கும் தளத்தின் மீது விழக்கூடிய ஒளிக்கதிர் ஆகும்.
 
எதிரொளிப்புக்கதிர்:
 
எதிரொளிப்புக்கதிர் என்பது, ஒளியானது பளபளப்பான எதிரொளிக்கும் பரப்பின் மீது பட்டப் பிறகு, அதே ஊடகத்திற்குத் திரும்ப வரும் ஒளிக்கதிர் ஆகும்.
 
குத்துக்கோடு:
 
குத்துக்கோடு என்பது எதிரொளிக்கும் பரப்பில், ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகும்.
 
படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு எதிரொளிப்பு விதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
  1. படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
  2. படுகோணமும் (\(i\)), எதிரொளிப்புக் கோணமும் (\(r\)) எப்போதும் சமமாகவே இருக்கும்.
θi=θr