PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செயல்பாடு:
  • மேசையின் மீது ஒரு முப்பட்டகத்தினையும் அதனருகில் ஒரு வெள்ளைத் திரையையும் வைக்கவும்.
190-1.jpg
  • டார்ச் விளக்கிலிருந்து வரும் ஒளியை முப்பட்டம் வழியேப் பாயச் செய்யவும்.
இப்போது நீங்கள் காண்பது என்ன?
 
திரையில் வெள்ளை ஒளியானது ஊதா, கருநீலம் (indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏழு வண்ணங்களாக (VIBGYOR) நிறப்பிரிகை அடைவதை உங்களால் காணமுடியும்.
 
6.png
  • இப்போது மற்றொரு முப்பட்டகத்தை படத்தில் காட்டியவாறு முதல் முப்பட்டகத்திற்கும் திரைக்கும் இடையில் தலைகீழாக வைக்கவும்.
தற்போது திரையில் நீங்கள் காண்பது என்ன?
 
இரண்டாவது முப்பட்டகத்திலிருந்து வரும் ஒளியானது வெண்மை நிறத்தில் இருப்பதை நீங்கள் காணலாம்.
 
190-2.png
 
இந்தச் செயல்பாட்டில், முதல் முப்பட்டகம் வெள்ளை ஒளியை ஏழு வண்ண ஒளிக் கதிர்களாகப் பிரிப்பதையும், இரண்டாவது முப்பட்டகம் அவற்றை மீண்டும் வெள்ளை ஒளியாக இணைக்கிறது என்பதையும் நீங்கள் காணலாம்.

இதனால், வெள்ளை ஒளி ஏழு வண்ணங்களைக் கொண்டது என்பது தெளிவாகிறது.
ஒரு ஊடுருவும் ஊடகம் வழியாக செல்லும் போது வெள்ளை ஒளியை அதன் ஏழு கூறு நிறங்களாக (அலைநீளம்) பிரிகை அடைவது ’நிறப்பிரிகை’ எனப்படும்.