PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playபூமியில் உயிர் வாழும் உயிரினங்கள் அனைத்திற்க்கும் ஆக்ஸிஜன் இன்றியமையாத ஒன்றாகும். \(1772 \)ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த C.W. ஷீலே என்ற அறிவியலாளர் ஆக்ஸிஜனை கண்டறிந்தார். ஆக்ஸிஜன் எரிதலுக்கு துணைபுரிவதால் இதனை நெருப்புக்காற்று என்று அழைத்தார். \(1774\) ஆம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி என்ற அறிவியலாளரும் ஆக்ஸிஜனை கண்டறிந்தார். லவாய்சியர் என்ற அறிவியலாளர் இந்த வாயுவிற்கு ஆக்ஸிஜன் என்று பெயரிட்டார்.
கிரேக்க மெழியில் ஆக்சிஜன் என்றால் அமில உருவாக்கி என்று பொருள். அதனால் அமில உருவாக்கத்தில் ஆக்ஸிஜன் அத்தியாவசியமான ஒன்று என கருதிய வேதியலாளர்கள் அதற்கு ஆக்சிஜன் என பெயரிட்டனர்.
ஆக்ஸிஜன் பரவல்:
பூமியில் அதிகமாக கிடைக்கும் வாயுக்களில் ஆக்ஸிஜனும் ஒன்றாகும். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்த படியாக அண்டத்தில் அதிகம் இருக்கும் ஒரு தனிமம் ஆக்ஸிஜன் ஆகும்.
ஆக்ஸிஜனானது தனித்த நிலையிலும் இணைந்த நிலையிலும் கிடைக்கிறது.
ஆக்ஸிஜன் இனைந்த நிலையில் | கிடைக்கும் இடம் |
சிலிக்கேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் மெட்டல் ஆக்ஸைடுகள் | பூமியில் மேல் அடுக்கு |
நீர் | பூமியின் தரைபகுதி |
ஓசோன் | வளிமண்டலத்தில் மேல் அடுக்கு |
ஆக்ஸிஜனின் இயிற்பியல் பண்புகள்:

புவியிலுள்ள தனிமங்களின் சதவிகிதம்
- ஆக்ஸிஜன் ஒரு நிறமற்ற மணமற்ற, சுவையற்ற வாயு.
- வெப்பம் மற்றும் மின்சாரத்தை எளிதில் கடத்தாது.
- ஆக்ஸிஜன் குளிர்ந்த நீரில் உடனடியாக கரையும்.
- காற்றைவிட கனமானது.
- அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும்போது திரவ நிலைக்கு செல்கிறது.
- இது எரிதலுக்கு துணைபுரிகிறது.
தீ முக்கோணம் (Fire of Triangle):
ஒரு இடத்தில் நெருப்பு எரிய வேண்டும் எனில் கீழ்காணும் மூன்று பொருட்களும் அவசியமாகும்.
- ஆக்ஸிஜன்
- வெப்பம்
- எரிபொருள்
இதிலிருந்து ஒரு பொருள் எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியமான ஒன்று என தீர்மானமாகிறது.
ஆக்ஸிஜனின் பயன்கள்:
- உலோகங்களை வெட்டவும் இணைக்கவும் வெல்டிங் என்ற முறையில் பயன்படுத்தப்படும் ஆக்சி-அசிட்டிலின் உருளைகளில் இது பயன்படுகிறது
- எஃகில் உள்ள கார்பன் மாசை நீக்க பயன்படுகிறது.
- விலங்குகளின் சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் உதவுகிறது.
- ராக்கெட்டுகளில் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
- நமது அன்றாட வாகனங்களின் இயந்திரம் வேலை செய்யவும் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
- ஆழ்கடலில் மூழ்குபவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தில் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
- கரித்தூளுடன் ஆக்ஸிஜனை இணைத்து வெடிபொருள் தயாரிக்கப்படுகிறது
- மெத்தனால் மற்றும் அமோனியா தயாரிக்க பயன்படுகிறது.