PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உலோகப் போலிகள்:
உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும்.
Example:
போரான், சிலிக்கான், ஆர்சனிக், ஜெர்மானியம், ஆண்டிமனி, டெல்லூரியம் மற்றும் பொலோனியம்.
AlAlloys.jpg
உலோகப்போலிகளுக்கான உதாரணம்
 
உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள்:
 
1. உலோகப் போலிகள் அனைத்தும் அறை வெப்பநிலையில் திண்மங்கள்.
2. உலோகப் போலிகள் பிற உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துகின்றது.
3. உலோகப் போலிகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மின்சாரத்தைக் கடத்துகின்றன (குறைகடத்திகள்).எ.கா: சிலிக்கான், ஜெர்மானியம்.
4. உலோகப் போலிகள் பளபளப்பானவை (உலோகப் பண்பு).எ.கா: சிலிக்கான்.
5. உலோகப் போலிகள் தகடாகவும், கம்பியாகவும் நீளும் பண்பைப் பெற்றிருப்பதில்லை (அலோகப் பண்பு).
6. உலோகப் போலிகள் உலோகங்களை விட குறைந்த அளவே மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்துகின்றன.
7. உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள் உலோகங்களின் பண்புகளை ஒத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் வேதியியல் பண்புகள் அலோகங்களின் பண்புகளை ஒத்திருக்கின்றன.
 
உலோகப் போலிகளின் பயன்கள்:
  
1. சிலிக்கான் - மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
2. போரான் - பட்டாசுத் தொழிற்சாலையிலும், ராக்கெட் எரிபொருளைப் பற்றவைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
 
சேர்மங்கள்:
ஒரு சேர்மம் என்பது சில தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதிச் சேர்க்கையின் மூலம் இணைந்து உருவாகும் தூய பொருளாகும்.
எடுத்துக்காட்டு: நீர், கார்பன் டை ஆக்சைடு, சோடியம் குளோரைடு.
மூலக்கூறு நீரில் கன அளவு விகிதம் - \(1:2\) (\(1\) ஆக்சிஜன் அணு மற்றும் \(2\) ஹைட்ரஜன் அணு) நிறை விகிதம் - \(8:1\) இணைந்து காணப்படும்.
 
சேர்மங்களின் வகைப்பாடு:
  
சேர்மங்களின் பகுதிப்பொருள்கள் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்படும்: அவை,
  • கனிமச் சேர்மங்கள்
  • கரிமச் சேர்மங்கள்
கனிமச் சேர்மங்கள் - உயிரற்ற (பாறைகள், தாதுக்கள்) பொருள்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் ஆகும்.
Example:
சுண்ணக்கட்டி, ரொட்டி சோடா
கரிமச் சேர்மங்கள் - உயிருள்ள (தாவரங்கள், விலங்குகள்) மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் ஆகும்.
Example:
புரதம், கார்போஹைட்ரேட்