PDF chapter test TRY NOW

1. சலவைத் தூள் - சலவைத் தொழிலில் வெளுப்பானாகவும், கிருமி நாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது.
  
i. வேதிப்பெயர் - கால்சியம் ஆக்சி குளோரைடு
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம், ஆக்சிஜன் மற்றும் குளோரின்
 
shutterstock_1191587458.jpg
சலவைத் தூள்
  
2. சுட்ட சுண்ணாம்பு - சிமெண்ட் மற்றும் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது. 
  
i. வேதிப்பெயர் - கால்சியம் ஆக்சைடு
ii. குதிப்பொருள்கள் - கால்சியம் மற்றும் ஆக்சிஜன்
 
shutterstock_1326782264.jpg
சுட்ட சுண்ணாம்பு
  
3. நீற்றிய சுண்ணாம்பு - சுவர்களில் வெள்ளை அடிப்பதற்குப் பயன்படுகிறது.
 
i. வேதிப்பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
 
shutterstock_1611202813.jpg
நீற்றிய சுண்ணாம்பு
  
4. சுண்ணாம்புக் கல் - சுண்ணாம்புக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.
  
i. வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்
 
shutterstock_1632986407.jpg
சுண்ணாம்புக் கல்